முதல் பக்கத்திற்கு


14. நடைமுறைத் தகவல்கள்

வங்கிகள்

வங்கிகள் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் பொதுவாக காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்திருக்கும். வியாழக் கிழமைகளில் பல வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 5.30 அல்லது 6 மணி வரை திறந்திருக்கும். டேன்கார்ட் மற்றும் கடன் அட்டைகளுக்கு பணம் வழங்கும் வசதியை பல வங்கிகள் வைத்துள்ளன.



அவசர நிலை

ஒரு அவசர நிலை அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அதாவது விபத்து, தீ பிடித்தல், திருட்டு மற்றும் நோய்வாய்ப்படுதல் போன்றவற்றுக்கு தொலைபேசி 112.

நூலகங்கள்

நகராட்சிகள் அனைத்திலும் பொது நூலகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளிநாடாப் படங்கள் ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம். இணைய தளத்தை அணுகவும் வசதி உண்டு. பெரும்பாலான நூலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை வார நாட்களில் திறந்திருக்கும். சனிக் கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 அல்லது 2 மணி வரை திறந்திருக்கும். உள்ளூர் கிளைகள் பல சமயம் குறைவான நேரங்களிலேயே திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு உங்கள் நகராட்சியினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அருங்காட்சியகங்கள்

டென்மார்க்கில் சுமார் 300 வேறுபட்ட அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அதில் பாதி, அரசு நடத்தும் அருங்காட்சியகங்கள் அல்லது அரசிடமிருந்து நிதி பெற்று நடத்தப்படும் அருங்காட்சியகங்கள். பெரும்பாலான அருங்காட்சியகங்களும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் பல அருங்காட்சியகங்கள் குழந்தைகளை இலவசமாக அனுமதிக்கின்றன. டென்மார்க் தேசிய அருங்காட்சியகம் மற்றும் டென்மார்க் தேசிய கலைக்கூடம் போன்ற அரசு அருங்காட்சியகங்கள் சில, புதன் கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கின்றன.

மருந்துக் கடைகள்

மருந்துச்சீட்டு மருந்துகளும், மருந்துச்சீட்டு அல்லாத மருந்துகளும் பொதுவாக மருந்துக் கடைகளில் கிடைக்கும். திங்கட் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும், சனிக் கிழமைகளில் பிற்பகல் 1 மணி அல்லது 2 மணி வரையிலும் மருந்துக் கடைகள் திறந்திருக்கும். மருந்துச்சீட்டு அல்லாத மருந்துகளை வழக்கமான திறந்திருக்கும் நேரங்களில் விற்கும் பிற மருந்துக் கடைகளும் இருக்கின்றன. இவை மருந்துக் குறிப்புகளையும் ஏற்று மருந்து உற்பத்தி செய்து கொடுக்கும் கடைகளிலிருந்து வரவழைத்துக் கொடுக்கும். வலி நீக்கிகள், இருமல் மருந்து போன்ற சில (மருந்து சீட்டு அல்லாத) மருந்து வகைகள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலிருந்து கிடைக்கும்.

ஒரு 24 மணி நேர மருந்து விற்பனை சேவை, சுழல் முறை அடிப்படையில் வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான நேரங்களுக்கு அப்பாற்பட்ட நேரங்களில் திறந்திருக்கும் மருந்துக் கடைகளின் விவரங்களை அருகிலுள்ள மருந்துக் கடையிலும் மற்றும் என்ற இணைய தளத்திலும் காணலாம். http://www.sundhed.dk/.

வழக்கமான நேரங்களுக்கு அப்பாற்பட்ட நேரங்களில் வாங்கும் மருந்துகளுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அஞ்சல் சேவைகள்

அஞ்சலகங்களிலும், பல பெட்டிக்கடைகளிலும் அஞ்சற் தலைகள் வாங்கலாம். அஞ்சலகங்கள் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் தேச, பன்னாட்டு பண வழங்கல்களை கையாள்கின்றன. முகவரி மாற்றங்களை உள்ளூர் அஞ்சலகங்களில் அறிவிக்கலாம். அவற்றிடமிருந்து முகவரி மாறுதல் படிவ உறைகளும் கிடைக்கும். நாடக நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு நுழைவுச் சீட்டுகளுக்கு அஞ்சலகங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உள்ளூர் அஞ்சலகங்களுக்கு வேறுபட்ட வேலை நேரங்கள் இருக்கின்றன். ஆனால் பெரும்பாலானவை திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். வியாழக் கிழமைகளில் மாலை 5.30 மணி வரையிலும் சனிக் கிழமைகளில் பிற்பகல் 1 மணி வரையிலும் திறந்திருக்கும். அனைத்து அஞ்சலகங்களின் அலுவல் நேரங்களை அறிய என்ற இணைய தளத்திலும் பார்க்கலாம். http://www.postdanmark.dk/.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கடிதங்களை அனைத்து இடங்களிலும் காணப்படும் சிவப்பு நிற அஞ்சற் பெட்டிகளில் போட வேண்டும். அஞ்சல் எடுக்கப்படும் நேரங்கள் அஞ்சற் பெட்டியின் முன் குறிக்கப்பட்டிருக்கும்.

பொது அலுவலகங்கள்

பெரும்பாலான பொது அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட தொலைபேசி மற்றும் திறப்பு நேரங்கள் இருக்கின்றன. பல அலுவலகங்கள் வியாழக் கிழமைகளில் சற்று அதிக நேரம் திறந்திருக்கும். வெள்ளிக் கிழமைகளில் சற்று முன்னதாகவே மூடப்படும். நகராட்சி மற்றும் மாவட்ட சபைகள் மற்றும் அரசு துறைகள், அவற்றுக்கென சொந்தமாக சுயசேவை வசதிகளுடன் இணைய தளங்கள் கொண்டிருக்கின்றன. மேலும் தகவலுக்கு உங்கள் நகராட்சியுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது இணைய தளத்தைப் பார்க்கவும். http://www.danmark.dk/.

பொது போக்குவரத்து

டென்மார்க்கில் விரிவான தேசிய மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து தொடர் அமைப்பு உள்ளது. பேருந்து மற்றும் இரயில் பயணத்திற்கு மாதாந்திர மற்றும் இதர குறைந்த சலுகை அட்டைகளை வாங்க முடியும். மேலும் தகவலுக்கு இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது நகராட்சிகளை தொடர்பு கொள்ளவும் அல்லது இணைய தளத்தைப் பார்க்கவும். http://www.rejseplanen.dk/.

கடைகள்

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அவை திறந்திருக்கலாம். உணவு, பானங்கள் மற்றும் இதர பல சரக்குகளை முக்கியமாக வணிகம் செய்யும் சிறிய கடைகள் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறந்திருக்கலாம்.

உடைகள் விற்கும் கடைகள் போன்ற சிறிய கடைகள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக் கிழமைகளில் சற்று கூடுதலான நேரம் திறந்திருக்கும். சனிக் கிழமைகளில் சற்று முன்னதாகவே மூடப்படும். பல பெரிய பேரங்காடிகளும், பல்பொருள் அங்காடிகளும் காலை 8 மணி அல்லது 9 மணி முதல் இரவு 8 மணி அல்லது 9 மணி வரை திறந்திருக்கும்.

தொலைபேசிகள்

பொது இடங்கள் பலவற்றில் கட்டணத் தொலைபேசிகள் இருக்கின்றன. நாணயங்கள் அல்லது தனி கட்டண அட்டைகளை பயன்படுத்தி தொலைபேசியை பயன்படுத்தலாம். பெட்டிக் கடைகளில் அல்லது பேரங்காடிகளில் அந்த அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து உள்ளூர் பகுதிகளும் தொலைபேசி எண் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும். அவை அஞ்சல் மூலம் வழங்கப்படுகின்றன.

தொலைபேசி எண் புத்தகங்களில் தொலைபேசி எண்களும், நகராட்சி, அவசர மருத்துவ சேவைகள், காவல் துறை, சங்கங்கள், அருங்காட்சியகங்கள், உள்ளூர் வரை படங்கள் மற்றும் விளம்பரப் பக்கங்கள் எனும் தலைப்பின் கீழ் வர்த்தக நிறுவனங்களின் விவரங்கள் போன்ற பயனுள்ள தகவல்களும் அடங்கியிருக்கும்.

தொலைபேசி எண்களை தொலைபேசி விசாரணை எண் 118-இல் கேட்டும், இணையதளத்தில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். dgs.tdconline.dk.





கடைசி புதுநிலை: 30-06-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை