முதல் பக்கத்திற்கு


11. பண்பாடும், ஓய்வு நேரமும்



செறிவுடைய ஒரு பண்பாட்டு வாழ்க்கைAudio

டென்மார்க் ஒரு செறிவான பண்பாட்டு வாழ்க்கையைக் கொண்டுள்ளது. ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு பல வாய்ப்புகளுக்கு வகை செய்கிறது. மக்களின் ஆதரவு கல்வி* , சங்க நடவடிக்கைகள் மற்றும் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கும் எமது வரலாற்று முறையில் தீர்மானிக்கப்பட்ட மரபில் இது வேரூன்றியிருக்கிறது.

  

பண்பாடு ஒரு பன்முக கருத்தாக்கம்

படைப்புக் கலைகள் பத்திரிகை, ஊடகம் மற்றும் எண்ணங்களில் மற்ற மதங்களில் ஆர்வம் ஆகியவற்றோடு, அன்றாட வாழ்வு முறையில் பழக்க வழங்க்கங்களையும் பண்பாட்டுக் கருத்தாக்கம் விரிவாக தன்னுள் கொண்டுள்ளது.

பல நடவடிக்கைகளும், அதிக அளவில் பங்கேற்பும்

பல மக்களும், சங்கங்களிலும் அல்லது அரசுசாரா அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விளையாட்டுகளிலும், ஓய்வு நேர நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாக்களில் கலந்து கொள்கிறார்கள். அல்லது நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளியில்* சேர்ந்து கொள்கிறார்கள் (''மக்கள் ஆதரவு கல்வி'' என்ற தலைப்பின் கீழ் 104-ம் பக்கம் பார்க்கவும்).

மற்ற பண்பாட்டு நடவடிக்கைகளில் நாடகம், திரைப்படம், அருங்காட்சியகங்கள், பொருட்காட்சிகள், சொற்பொழிவுகள், நூலகங்கள் முதலானவை அடங்கியிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் செலவினங்களாக இருக்கலாம். பெரும்பாலான பெரிய நகரங்களில் சுற்றுலா முகமையமைப்புகள் இருக்கின்றன.

பெரும்பாலான பெரிய நகரங்களில் சுற்றுலா முகமையமைப்புகள் இருக்கின்றன. அங்கே உங்கள் பகுதியில் நடக்கும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றி தகவல் கிடைக்கும். நூலகம் அல்லது செய்தி ஏடுகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய தளம் மூலமும் நீங்கள் தகவல் பெறலாம்.

ஒரு நாட்டின் பண்பாட்டில் பாரம்பரியமும், நட்புறவு சமூகக் கூட்டங்கள், விருந்துகள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பழக்கங்களும் அடங்கியுள்ளன.

பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரம்Audio

ஊடகமும் பொது விவாதமும்

ஜனநாயக முறையின் முக்கியப் பங்கு

பேச்சு சுதந்திரமும், சிந்தனை சுதந்திரமும் ஜனநாயக முறைக்கு அவசியமானவை. பத்திரிகை சுதந்திரமும் மற்றும் பொது விவாதத்திற்கு இவை அடிப்படையானவை.

சிறுபான்மை இனங்களுக்கு பல ஊடகங்கள்

டென்மார்க்கின் அன்றாட வாழ்க்கை, விரிவான தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள், செய்தி ஏடுகள், வார மற்றும் மாத இதழ்கள், அதிகரித்து வரும் இணையதளத் தகவல் தொடர்பு ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உள்ளாகிறது. இன்று இனச் சிறுபான்மை குழுக்களின் நலன்களுக்காகவும் இந்த ஊடகங்கள் இயங்குகின்றன.

ஊடகத்தின் பரந்த உலகம்

ஊடகம் பெருமளவுக்கு வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளையே வழங்குகிறது. எனினும், நடப்பு சமுதாய, அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்கும் முக்கிய வாய்ப்பை வழங்குகிறது. சமூக பிரச்னைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் எடுத்துக்காட்டுவதில் சுயேச்சையான விவாதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சங்கங்கள் மிகுந்த ஒரு நாடு கூட்டமைப்புகளிலும், சங்கங்களிலும் மிகவும் உயர்விகித உறுப்பினர்களைக் கொண்ட உலகின் நாடுகளில் டென்மார்க் ஒன்றாகும். மக்கள் தொகையில் 73 சதவீதத்தினர் குறைந்தது இரண்டு சங்கங்களிலாவது உறுப்பினராக இருப்பார்கள். பிறரை சந்திக்க விரும்பும் புதிய குடிமக்கள், ஏதேனும் ஒரு சங்கத்தில் சேருவதை

பயனுள்ளதாக உணர்வார்கள்.

 
 

சுதந்திரம் உடைத்த பத்திரிகைகளுக்கான கட்டுப்பாடுகள்

டென்மார்க்கில் தணிக்கையற்ற பத்திரிகை சுதந்திரம் உண்டு. ஆனாலும், சில வகை செய்திகளை பிரசுரம் செய்வதனின்று ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசின் இரகசியகங்களை வெளியிடுதல் அல்லது பழித்துரைக்கும் உரைகளை வெளியிடுதல், இழிவுபடுத்தும் அல்லது இன வெறியைத் தூண்டுகின்ற மனப்பான்மை அல்லது கருத்துகளை பரப்புதல் ஆகியவை சட்ட விரோதமானவை.

இத்தகைய கருத்துகளும் மனப்போக்குகளும் ஊடகத்தில் விவாதிக்கப்படக்கூடாதவை என்று பொருளாகாது. ஆனால், இவை நேர்மையாகவும், விருப்பு வெறுப்பின்றியும் விவாதிக்கப்பட வேண்டும். அல்லது விவாதத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

  

உரிமக் கட்டணம் டென்மார்க் வானொலி மற்றும் தொலைக்காட்சி 2 (டீ.வி.2) பொது சேவை* ஒலிபரப்பு நிலையங்கள். விரிவான விருப்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு அவை சட்டப்படி கடமைப்பட்டுள்ளன. பொது சேவை ஊடகங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி உரிமக் கட்டணம்* மூலமாகவே அதிக நிதி வசதி கிடைக்கிறது. வானொலி மற்றும் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணம் செலுத்த வேண்டும். உரிமக் கட்டணத்தை டென்மார்க் நாடாளுமன்றம் நிர்ணயிக்கிறது. உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான பதிவு, புதிய தொலைக்காட்சி அல்லது வானொலி பெட்டியை நீங்கள் வாங்கும் கடை மூலம் செய்யப்படுகிறது. நீங்கள் டென்மார்க் வானொலி துறையையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

டென்மார்க்கில் மத வழிபாடுAudio

வழிபாட்டுச் சுதந்திர உரிமை

டென்மார்க் அரசியல் சாசனத்தின் கீழ், ''குடிமக்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு உகந்த முறையில் கடவுளை வழிபடும் கூட்டங்களை அமைத்துக்கொள்ள உரிமை உண்டு ''.

அனைத்து டென்மார்க் குடிமக்களும், தாங்கள் சார்ந்துள்ள மதமுறையின்படி வழிபட சுதந்திரம் உண்டு. இதன் பலனாக, பல மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

டென்மார்க் தேசிய தேவாலயம்

டென்மார்க் அரசியல் சாசனத்தின் கீழ் டென்மார்க் தேசிய தேவாலய முறை* இவாங்கெலிக்கல் – லூதரன் திருச்சபையாகும்*. பிறப்புகள் பதிவு, பெயர்கள், மற்றும் இறப்புகள் பதிவு உட்பட சமுதாயத்திற்கான பல தேவைகளை திருச்சபை நிறைவேற்றுகிறது.

  

தேசிய திருச்சபை உறுப்பினர் பதவி

டென்மார்க் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், சுமார் 85%. டேனிஷ் மக்கள், டென்மார்க் தேசிய திருச்சபையின் உறுப்பினர்கள். அவர்களில் பலரும் இதன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கப்பட்டபோது, உறுப்பினர்களானார்கள்.

டென்மார்க்கிற்கு புதிதாக வருவோர் எவரும் பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்று மூலம் டென்மார்க் தேசிய திருச்சபையில் சேரலாம்.

டென்மார்க் தேவாலய முறையைச் சேராத இவாங்கெலிக்கல் லூதரன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் டென்மார்க்கில் நுழைந்ததும் அதிகாரியிடம் தெரிவித்தால், டென்மார்க் தேசியப் பதிவேட்டில் பதிவு செய்த பின் டென்மார்க் தேசிய திருச்சபையில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுவார்கள் ( பதிவு செய்தல் பற்றி மேலும் தகவலுக்கு 31-ஆம் பக்கத்திலுள்ள ''நகராட்சி வழங்கும் உதவி மற்றும் அறிவுரை '' என்ற பிரிவை பார்க்கவும் ).

நீங்கள் ஞானஸ்நானம் வழங்கப்பட்டிருந்தால், அது இவாங்கெலிக்கல் லூதரன் தேவாலயம் ஒன்றில் செய்யப்படாமலிருந்தால், நீங்கள் வசிக்கப் போகும் தேவாலய அலுவலகத்தின் பாதிரியார் ஒருவரை தொடர்பு கொள்வதன் மூலம் டென்மார்க் தேசிய திருச்சபையின் உறுப்பினராகலாம்.

உங்களுக்கு ஞானஸ்நானம் வழங்கப்படாவிட்டால், ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு டென்மார்க் தேசிய திருச்சபையில் சேரலாம்.

டென்மார்க் தேசிய திருச்சபை உறுப்பினர் எவருக்கும் டென்மார்க்கில் வரம்பில்லாத வரி செலுத்தும் பொறுப்பு இருந்தால் அவர் தேவாலய வரியும் செலுத்த வேண்டும். தேவாலய வரிகள் தேவாலயங்களையும் அவை சார்ந்த அமைப்புகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படுகின்றன. தேவாலயத்தின் தொண்டுகள் மற்றும் ஞானஸ்நானம், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றிற்கு தேவாலயங்கள் பயன்படுத்துகின்றன.

டென்மார்க் தேசிய தேவாலய உறுப்பினராக நீடிக்க நீங்கள் விரும்பவில்லையெனில், உங்கள் பகுதி பாரிஷின் மத குருவை தொடர்பு கொண்டு உறுப்பினர் பதிவியிலிருந்து விலகிக் கொள்ளலாம். டென்மார்க் தேசியப் பதிவேட்டில் பதிவு செய்து கொண்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் நீங்கள் விலகிக் கொண்டால் விலகல் அந்த தேதியிலிருந்து நடப்புக்கு வந்து விடும்.

பிற மத சமூகங்கள்

150 வெவ்வேறு பிரிவுகள்

இவாங்கெலிக்கல் லூதரன்* தேசிய திருச்சபையைத் தவிர பல மத சமூகங்கள் டென்மார்க்கில் இருக்கின்றன. டென்மார்க்கில் பல்வேறு எண்ணிக்கையில் 150 வெவ்வேறு மத சமூகங்கள் இருக்கின்றன.

இந்த மத சமூகங்கள் தங்களுக்கு சொந்தமான குருமார்கள், இமாம்கள், யூத மத குருக்கள் அல்லது கூட்டு வழிபாடு நடத்துவோர்களை அமர்த்திக் கொள்ளலாம். தலத் திட்டமிடல் வரைமுறைகளுக்குட்பட்டு, அவையும் வழிபாட்டுக்காக கட்டிடங்களை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. அடக்க மயானங்களை அமைக்கவும் அவை அனுமதி பெறலாம். அத்துடன் பள்ளிக் கூடங்களை நடத்தவும் பிரசுரங்களை வெளியிடவும் அவை அனுமதிக்கப்படும்.

ஆமோதிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகள்

இசுலாமியர், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் உட்பட டென்மார்க்கில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுமார் 90 மத சமூகத்தார் இருக்கிறார்கள். அதாவது, அவர்களுடைய மத முறைப்படி திருமணம் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே இதன் உட்பொருளாகும்.

இவற்றில் 11 குருமார்கள் சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளனர். பெயரிடுதல் அல்லது ஞான அருளுரை வழங்கல், திருமணங்களை நடத்துதல் ஆகியவற்றிற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் சான்றிதழ் வழங்க முடியும். டென்மார்க் தேவாலயம் வழங்கும் சான்றிதழுக்கு நிகராக அவை செல்லுபடியாகும்.

டென்மார்க்கில் மக்கள் ஆதரவு கல்விAudio

பொது நூலகங்கள்

நூலகத்தில் தொடக்கம்

உங்கள் நகராட்சிப் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் தேடுவதற்கு நூலகம் ஒரு சிறந்த இடமாகும். நூலகங்களில் நுழைவதற்கு கட்டணங்கள் கிடையாது.

அவற்றில் பலவும் விரிவாக தேர்ந்தெடுக்கக்கூடிய புத்தகங்கள், தகவல்கள், வசதிகள் மற்றும் பிற ஆதாரங்கள் கொண்டவை.

புத்தகங்களை இரவல் தருவதுடன் குறுந்தட்டுகள், ஒலி நாடாக்கள் மற்றும் ஒளி நாடாக்கள் ஆகியவையும் கொண்டுள்ளன. பல நூலகங்கள் கண்காட்சிகளையும், திரைப்படக் காட்சிகளையும், குழந்தைகள் நாடக நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்கின்றன.

நீங்கள் இணையத்தையும் அணுகலாம், நாளேடுகளைப் படிக்கலாம் அல்லது பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல் அல்லது விஷயம் தேடிக் காணலாம்.

பல்வேறு மொழிகளில் விஷயங்கள்

பெரும்பாலான நூலகங்கள் ஒரு நூலகரை பணியில் அமர்த்தி வைத்துக் கொள்கின்றன. டேனிஷ் பேசாதவர்களுக்கு புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்வதே அவரது பணி. நீங்கள் விரும்பும் விஷயம் நூலகத்தில் இல்லையென்றால், குடியிறங்குவோருக்கான பொது நூலகச் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம். அதனிடம் 100 வெவ்வேறு மொழிகளில் 140,000-க்கும் அதிகமான தலைப்புகளில் விவரங்கள் உள்ளன.

குடியிறங்குவோருக்கான நூலகங்கள் மற்ற நூலகங்களுக்கு புத்தகங்களை இரவல் வழங்கும். ஆனால் பொது மக்களுக்கு அவ்வாறு தராது.

ஓய்வு நேரக் கல்வி

ஓய்வு நேரத்தில் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்

டென்மார்க்கில் மக்கள் பலரும், ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்லது துறையில் தங்களது ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் தையல், நாடகம், நடனம், இசை, கூட்டப்பாடல், கணினிப் பயிற்சி, சமையல், அந்நிய மொழிகள், தத்துவம் அல்லது வரலாறு ஆகியவற்றுக்கான வகுப்புகளுக்குச் செல்லலாம்.

டென்மார்க்கில் நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகள்

நாட்டுமரபு உயர்நிலைப் பள்ளிகள்

மக்கள் ஆதரவு கல்விக்கான* டென்மார்க் மரபுகள் – இன்றுகூட டென்மார்க் சமூகத்தில் நற்பாதிப்பு செய்பவை. 19-வது நூற்றாண்டில் தொடங்கிய பண்பாட்டு இயக்கத்திலிருந்து தோன்றியவை. சமூகம் பற்றித் தெரிந்து கொள்ளவும் அறிவு பெறவும் எவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அந்த இயக்கம் அடிப்படையாகக் கொண்டது. டென்மார்க் நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளி* இந்த இயக்கத்தின் பின்னணியில் நிறுவப்பட்டது.

இன்று 87 அரசு நிதி உதவி பெற்ற நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. படைப்பு விஷயங்கள், விளையாட்டுகளிலிருந்து கல்வி விஷயங்கள், சமூகம் பற்றிய பொதுத் தகவல்கள் வரையான விரிந்த பாடத் திட்டத்தை அவை வழங்குகின்றன.

பண்பாட்டு நடவடிக்கைகள்

பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு உண்பது, உறங்குவது, வசிப்பது அனைத்தும் பள்ளியில் தான். பயிற்சி ஒரு வாரம் முதல் ஓர்ஆண்டு வரை ஆகலாம். பாடங்கள் தவிர பயிற்சியில் பல பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள், சுற்றுலாக்கள், விருந்துக் கூட்டங்கள், மாலை நேர சொற்பொழிவுகள் ஆகியவையும் இருக்கும். பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் மாணவராக இருக்க நீங்கள் விரும்பாவிடில் அல்லது இயலாவிடில் நீங்கள் வீட்டிலிருந்து கொண்டு பகல் மாணவராக பள்ளிக்கு வரலாம்.

அங்கேயே தங்கிப்படிக்கும் நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகளைத் தவிர பகல் நேர நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகளும் பல இருக்கின்றன. இங்கே மாணவர்கள் அன்றாடம் வகுப்பு முடிந்த பின் வீட்டுக்கு போகிறார்கள்.



டென்மார்க்வாசிகளை சந்திப்பதற்கு நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளி நல்லதோர் இடம் நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகள், டேனிஷ் சமூகத்தை நன்கு புரிந்துகொள்வதற்கு நல்ல வாய்ப்பை அளிக்கின்றன. அவை பொதுவான முறையில் டென்மார்க் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மற்றும் வேறு பல விஷயங்களை வழங்குகின்றன. ''சாதாரண'' டென்மார்க்காரர்களை சந்திக்கவும் அவை நல்ல வாய்ப்பைத் தருகின்றன.

மாலை நேர வகுப்புகள்

புதிய குடிமக்களுக்கு மாலை நேர வகுப்புகள்

இறுதியாக நாடெங்கிலும் வழங்கப்படும் பல மாலை நேர வகுப்புகளில்* எதற்கேனும் மக்கள் செல்கிறார்கள். புதிய குடிமக்களுக்கான சிறப்பாக வகுக்கப்பட்ட பாடங்களை இவை வழங்குகின்றன.

பயிற்சிகளுக்கு ஒரு கட்டணம் உண்டு. ஆனால் அரசினால் நிதி உதவி வழங்கப்படுவதால், கலந்து கொள்வோருக்கு முழு செலவு இல்லை.

சங்கங்கள்Audio

ஒரு துறையின் ஆர்வத்தை மக்கள் பகிர்ந்து கொள்ளல்

டென்மார்க்கின் ஓய்வு நேர வாழ்க்கையின் மிகச் சிறப்பான அம்சங்களில் ஒன்று சங்க வாழ்க்கை முறை.

ஒரு துறையில் உதாரணமாக கல்வி, அரசியல், பண்பாடு இவற்றில் ஆர்வம் உடைய/பகிர்ந்துகொள்ளும் மக்களின் ஒரு குழுவே சங்கம் அல்லது கழகம்.

பலதரப்பட்ட ஆர்வங்கள்

பல சங்கங்களும், நிறுவனங்களும் மன்றங்களும் இருக்கின்றன. அவை விளையாட்டு மன்றங்கள், அரசியல் கட்சிச் சங்கங்கள், வீட்டு வசதிச் சங்கங்கள், கலைச் சங்கங்கள், குடியிறங்குவோர் சங்கங்கள், மதச் சங்கங்கள், குறிப்பிட்டவொரு பொழுதுபோக்கைக் கொண்ட மக்களின் சங்கம் என்று பல வகைப்பட்டவை.

தவிரவும், ஊனமுற்ற மக்கள், பல்வேறு நோயாளி குழுக்கள், மூத்த குடிமக்கள், ஓரினச் சேர்க்கை மக்கள் ஆகியோரது நலன்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட சங்கங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குக்கென, உதாரணமாக, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அல்லது பிராணி நலவாழ்வு இவற்றுக்கென சில சங்கங்கள் பணியாற்றுகின்றன. பல சமயம் குடியிருப்புப் பகுதிகளுடன் தொடர்புடைய ஏராளமான இடங்களும், மன்றங்களும், பண்பாடு சார்ந்த மையங்களும் இருக்கின்றன.

இங்கே மக்கள் சீட்டு விளையாடலாம், விவாதங்கள் நடத்தலாம், ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடலாம் அல்லது சொற்பொழிவுகளைக் கேட்கலாம்.

யார் வேண்டுமானாலும் ஒரு சங்கத்தைத் தொடங்கலாம்

யார் வேண்டுமானாலும் ஒரு சங்கத்தை அமைக்கலாம். சங்கத்தின் குறிக்கோளையும், அதன் விதிகளையும் ஏற்படுத்தி, சட்டபூர்வமான கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற ஒரே நிபந்தனை உண்டு.

குடியிறங்குவோருக்கும் அகதிகளுக்குமான தனிச்சிறப்பு கவனத்திற்கான சங்கங்கள் குடியிறங்குவோர்கள் மற்றும் அகதிகளின் சிறப்பு கவனத்திற்கான 200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. உதாரணமாக, பண்பாடு சங்கங்கள், அரசியல் சங்கங்கள் மற்றும் நட்புறவு சங்கங்கள் ஆகியவை ஆகும். இச்சங்கங்களின் குறிக்கோள்களில் இவை அடங்கும். அகதிகள், குடியிறங்குவோரிடையே உறவுகள், அவர்களுக்கும் டென்மார்க் மக்களுக்கும் இடையேயிலான பிணைப்புகள் இவற்றை வலுவூட்டுவது, பிறர் பற்றிய தவறான நம்பிக்கைகளை, கருத்துகளை இரு தரப்பிலும் நீக்குவது முதலானவை.

ஆட்டங்கள், உடற்திறன் விளையாட்டுகள்Audio

உள், வெளி விளையாட்டு கழகங்கள்

டென்மார்க் மக்கள் பலரும் – குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைய சமூகத்தினர்- தங்கள் ஓய்வு நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ் விளையாடவும் அல்லது நீச்சல் பயிலவும் அல்லது உடற்திறன் பயிற்சியில் ஈடுபடவும் விளையாட்டு மன்றங்களில் சேருகிறார்கள். மற்றவர்கள் ரோலர்-ஸ்கேட்டிங், மிதவேக ஓட்டங்கள் அல்லது எப்போதும் செய்யக்கூடிய வேறு பல விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

சமாளிக்கக்கூடிய கட்டணம்

அநேகமாக அனைத்து நகராட்சிகளிலும் விளையாட்டு மையங்கள் உள்ளன. இவை பொது மக்களுக்கென உள்ளன. சில சமயம் இவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

திட்டமிட்டுச் செயல்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் பலவற்றையும் சங்கங்கள், மன்றங்கள் அல்லது நிறுவனங்கள் நடத்துகின்றன. இவற்றில் எவரும் சேரலாம்.

உறுப்பினர் கட்டணம் உண்டு. ஆனால் நகராட்சி நிதி உதவி வழங்குவதால், கட்டணமானது பணச்சிக்கல் உள்ளவர்களுக்குக் கூட கட்டுபடியாகக் கூடியதாக இருக்கும்.

ஆதரவு நல்கும் பெற்றோர்கள்

தன்னார்வ உடற்திறன் விளையாட்டுகளில் தங்கள் குழந்தைகள் கலந்து கொள்வதை பெற்றோர் பல சமயங்களில் ஆதரிக்கிறாகள். உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்துவது, அவர்களை மன்றங்களில் கொண்டு விட்டு வருவது, திரும்ப அழைத்து வருதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தங்களது ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்.





கடைசி புதுநிலை: 31-08-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை