முதல் பக்கத்திற்கு


4. வருகையும் வசித்தலும்



டென்மார்க்கில் குடியிறக்கம்Audio

நூற்றாண்டுக் கணக்காக மக்கள் டென்மார்க்கில் குடிபெயர்ந்தவாறாக இருக்கிறார்கள். எக்காலமும் அருகாமை நாடுகளாம் ஜெர்மனி, போலந்து, ஸ்வீடன் போன்றவற்றிலிருந்து தொடர்ந்து உள்பெருகும் குடியிறக்கம் தவிர, குடியிறங்கும் பிற தொகுப்புகளில் இவை குறிப்பிட்டவை: 16-ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள், 17-ஆம் நூற்றாண்டில் யூதர்கள் மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் பிரெஞ்சு ஹ்யுகனோக்கள், 1970-களில் டென்மார்க்கின் தொழில் நிறுவனங்கள், பணிபுரிவோரை – அதிலும் முக்கியமாக துருக்கி, பாகிஸ்தான், யூகோஸ்லாவியா, மொராக்கோ இவற்றிலிருந்து – டென்மார்க்குக்கு அழைத்தனர். சமீப வருடங்களில், மக்கள் – அதிலும் சிறப்பாக அகதிகளும், குடும்பங்களுடன் மீண்டும் ஒன்று சேர்வோரும் – உலகெங்கிலும் இருந்தும் டென்மார்க் வருகிறார்கள்.

 

பார்த்துச் செல்வதும், குறைந்த காலம் தங்குதலும்

டென்மார்க்கினுள் நுழைவு பெறுவதற்கு, உங்களிடம் ஒரு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண அடையாள ஆவணம் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் தங்க விரும்பும் வெளிநாட்டுக் குடிமகன் எவரிடமும், பொதுவில் டென்மார்க் இருப்பிட அனுமதி இருக்க வேண்டும். டென்மார்க் வருவதன் நோக்கம் வேலை பெறுவதாக இருந்தால் இருப்பிட அனுமதி, வேலை அனுமதி இரண்டும் வேண்டும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் டென்மார்க்குக்கு ஒரு சிறப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது. எனவே சிறப்பு விதிகள் இந்நாடுகளின் குடுமக்களுக்குப் பொருந்தும். ஐ.ஓ* மற்றும் ஈ.ஈ.ஏ.யில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மற்றும் ஸ்விட்சர்லாந்து குடிமக்களுக்கும் அவ்விதமே, நார்டிக் குடிமக்களுக்கு டென்மார்க் வருவதற்கு மற்றும்/அல்லது குடிபுகுவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. தடையின்றி எல்லை தாண்டிச் செல்வதை எளிதாக்கும் ஐ.ஓ. விதிகள்படி, ஐ.ஓ/ஈ.ஈ.ஏ அங்கம் வகிக்கும் மற்றும் ஸ்விட்சர்லாந்து குடிமக்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் மாநில மாவட்ட அலுவலகம்,-- வழங்கும், ஒரு குடியிருக்கும் சான்றிதழைப் பெறலாகும்.

டென்மார்க்கில் வசிக்கும் குடியிறங்குவோரும் குடியிறங்குவோரின் சந்ததிகளும் தோராயமாக எண்களில்:

1980153,000
1990215,000
2000396,000

ஆதாரம்- Danmarks Statistik மற்றும் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் www.nyidanmark.dk.

நுழைவு அனுமதி

பல நாடுகளின் குடிமக்களும் டென்மார்க் வந்து செல்ல – உதாரணமாக, கலாசார நிகழ்ச்சிக்காகவோ, சுற்றுலாப் பயணத்திற்கோ, குடும்பத்தைப் பார்த்துச் செல்லவோ – நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். டென்மார்க்கில் வேலை செய்வதற்கு நுழைவு அனுமதி செல்லாது. பொதுவில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அது தரப்படும். டென்மார்க் வருவதற்கு எந்தெந்த நாடுகளின் குடுமக்களுக்கு நுழைவு அனுமதி வேண்டும் என்ற பட்டியல் டென்மார்க் குடியிறக்கச் சேவையின்* இணைய தள அக-ஏட்டில் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு மக்கள் டென்மார்க்குக்குப் புறப்படுவதற்கு முன்னதாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டவரின் தற்போது வசிக்கும் தேசத்திலுள்ள டென்மார்க்கின் பிரதிநிதியாக இருப்போர் (உதாரணம் தூதராலயம் போன்றவை), பொதுவில் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை செய்வர். டென்மார்க் ஷென்கென் உடன்படிக்கையில் சேர்ந்துள்ளது. எனவே ஒரு டென்மார்க் நுழைவு அனுமதி ஷென்கன் இடம் எங்கிலும் பொதுவாகச் செல்லுபடியாகும்.

அகதிகளும் அடைக்கலம் நாடுவோரும்

ஜெனீவா கோட்பாடு மற்றும் ஐரோப்பிய மனித உரிமை குறித்த கோட்பாடு

28 ஜூன் 1951-இன் ஐ.நா. அகதிகள் கோட்பாட்டினை – இது ஜெனீவா கோட்பாடு எனவும் அழைக்கப்படும் – டென்மார்க் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், அது இனம், நாடு, மதம் அல்லது அரசியல் கொள்கைத் திணிப்பு இவ்விதம் எது பற்றியும் கொடுமைக்கு உள்ளாகும் எவரும் பாதுகாப்பு கொடுக்க உறுதி கொண்டுள்ளது. இத்தகையோர் கோட்பாடு அகதிகள் என்றவாறான ஒரு அந்தஸ்து பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் வரும் அத்தனை அகதிகளுக்கு உள்ளும், டென்மார்க்குக்கும் ஐ.நா. அகதிகள் விவகார உயர் ஆணையருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 500 பேர்கள் வர அனுமதிக்கப்படுகிறார்கள். அகதிகள் கோட்பாடுக்கு மேலாகவும், டென்மார்க் பிற அனைத்து நாட்டு கோட்பாடுகளையும் – உதாரணமாக ஐரோப்பிய மனித உரிமை மீதான கோட்பாடு - ஐ.நா.வின் சித்திரவதையின் மீதான கோட்பாடு, ஏற்றுள்ளது. இதனால் கொலை, சித்திரவதை, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான தண்டனைக்கு ஆளாகக்கூடும் என்றானால், வெளிநாட்டவர் தம் தேசம் திரும்புவதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்பதற்கு டென்மார்க் கடமைப்பட்டுள்ளது.

அடைக்கலம் நாடுவோர்

மற்றொரு நாட்டில் அகதி என்றவாறு, இருப்பிட அனுமதி கோரி விண்ணப்பம் செய்பவர் அடைக்கலம் நாடுவோர் எனப்படுவர். டென்மார்க்கில் அடைக்கலத்துக்கு விண்ணப்பம் செய்யப்பட்டால், அடைக்கல வேண்டுகோளை டென்மார்க்கில் மேற்கொள்ள வேண்டுமா அல்லது மற்றொரு ஐ.ஓ. அங்க நாடு மேற்கொள்ள வேண்டுமா அல்லது விண்ணப்பம் ஐ.ஓ.வின் வெளியிலான பாதுகாப்பான மூன்றாவது ஒரு நாட்டுக்கு செல்லப்பட வேண்டியதா எனபதை டென்மார்க் குடியிறக்கச் சேவை* நிர்ணயிக்கிறது.

அடைக்கலம் அளிக்கப்பட்டால்

அட்க்கலம் நாடுவோர் அடைக்கலத்திற்குத் தகுதி உள்ளவர் என்று டென்மார்க் குடியிறக்கச் சேவை தீர்மானித்தால், டென்மார்க்கில் அகதியாக இருக்கும் அனுமதி அளிக்கிறது. இதன்பின், டென்மார்க் குடியிறக்கச் சேவை எந்த நகராட்சியில் அந்த அகதி இடம் பெறலாம் என்பதை நிர்ணயிக்கும்.

  

அடைக்கலம் நிராகரிக்கப்பட்டால்

கோரிய அடைக்கம் மறுக்கப்பட்டால், அந்த அடைக்கலம் நிர்ணயம் தானாகவே அகதிகள் குழுமத்தினரின் (Flygtningenævnet) மறுபரிசீலனைக்கு உள்ளாகிறது. அகதிகள் குழுமம், டென்மார்க் குடியிறக்கச் சேவையின்* நிர்ணயத்தை ஏற்று உறுதிப்படுத்தலாம் அல்லது ஒதுக்கி மாறாக அடைக்கலம் தரலாம்.

குடும்பம் திரும்ப ஒன்று சேர்தல்

நெருங்கிய குடும்பத்தினர் தகுதியுள்ளவர்

டென்மார்க்கில் நிரந்தர முகவரி உள்ள நபர்கள், டென்மார்க் அந்நியர்கள் சட்டத்தின்* கீழ், தவிரவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில், தங்களது மிக நெருங்கிய குடும்பத்தினரை உடன் சேர்ந்துகொள்ளச் செய்யலாம். இதன் பெயர் குடும்பம் திரும்பவும் ஒன்று சேர்தல் என்பதாகும். திரும்பிச் சேர்வதற்குத் தகுதியுள்ள குடும்பத்தினரில், கணவன்/மனைவி அல்லது வயது வராத குழந்தைகள் வழக்கமாக அடங்குவர்.

திருமண/உடன் வசிப்பு உறவின் நம்பகம் அவசியம்

திருமண அல்லது உடன் வசிப்பு உறவு நம்பத்தக்கதாக இல்லாமல், ஆனால் அவ்வுறவைப் பயன்படுத்தி விண்ணப்பக்காரருக்கு இருப்பிட அனுமதி பெறச் செய்வது காரணமானால், இருப்பிட அனுமதி வழங்கப்படுவதற்கில்லை.

இருக்க இடம், பொருளாதார நிலை, வயது பிறவற்றின் தேவை

குடும்பம் திரும்பிச்சேர அனுமதி பெறுவதற்கு, உங்கள் வகையைப் பொருத்து, குறிப்பிட்ட சில தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். இவ்விதத் தேவைகள் வசிப்பவரது இருப்பிடம், வருமானம் பற்றியதாக இருக்கலாம். அல்லது திருமணமான இருவர் வயதும் 24-க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டியதோ மற்றும் மற்ற நாடுகளைவிட டென்மாக்குடனேயே அதிகப் பிணைப்பு உள்ளதோ தேவைப்படலாம். இந்தத் தேவைகளின் நோக்கங்களில் ஒனஅறு, மிகக் குறைந்த வயதினர் விருப்பத்திற்கு எதிராக கட்டாயத் திருமணத்திற்கு ஆளாவதிலிருந்து பாதுகாக்கப்படுவதும், மேலும், ஒருமைப்பாடு ஏற்பட மிகச் சிறந்த அடிப்படை இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்.

இருப்பிட அனுமதி

கால வரம்பற்ற இருப்பிட அனுமதி தரப்படுவது

முதன்மையாக அகதிகளுக்கும் மற்றும் குடும்பத்துடன் திரும்பச் சேர்ந்தவர்களுக்கும் நிரந்தர இருப்பிடம் அமைவது கருதி, இருப்பிட அனுமதி தரப்படுகிறது. நிரந்தர இருப்பிடம் அமைவது கருதி உங்களுக்கு இருப்பிட அனுமதி தரப்பட்டிருந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கால வரம்பற்ற இருப்பிட அனுமதி பெறலாம். இதற்கு, டென்மார்க் சமூகத்துடன் ஒருமைப்பாடு கொள்ள முயற்சி செய்தீர்களா என்பதும், தவிர பல குறிப்பிட்ட விஷயங்களை நிறைவு செய்தீர்களா என்பதும் தேவை. பொதுஜன அதிகாரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்து கடன் இல்லாமலிருப்பதும் அல்லது தீவிரக் குற்றவியல் செயல்களைப் புரிந்திருக்கக் கூடாது என்பதும் அவற்றில் சில.

இருப்பிட அனுமதி இரத்து செய்யப்படலாம்

கால வரம்பு உள்ளதாகவோ கால வரம்பற்றதாகவோ எப்படி அது கொடுக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் ஏமாற்றி இருப்பிட அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது ஷென்ஷென் செய்தி சேகரிப்பு* முறைப்படி நீங்கள் வேண்டாத நபர் என குறிப்பிடப்பட்டாலோ, இருப்பிட அனுமதி ரத்து செய்யப்படும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

ஒரு கால வரம்புள்ள இருப்பிட அனுமதி பிற காரணங்கள் – உதாரணமாக, விண்ணப்பப் படிவத்திலோ இருப்பிட அனுமதியிலோ தரப்பட்ட விஷயம் தவறானதாக இருப்பது அல்லது தற்சமயம் ஏற்புடையதாக இல்லாமல் போவது – குறித்தும் ரத்து செய்யப்படலாம். மேலும் இவ்வுதாரணத்துக்கு, நீங்கள் கணவன்/மனைவியுடன் திரும்பச் சேர்ந்து ஆனால் கூட வசிக்காமல் இருந்தால், வழக்கமாக உங்களது இருப்பிட அனுமதி ரத்து செய்யப்படும்.

நிரந்தர இருப்பிட அனுமதி கொடுக்கப்படும் வரை, தனது மூலதேசம் திரும்பினால் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கும் வரையிலும், அகதிகள் டென்மார்க் சமூகத்தின் பாதுகாப்பை அனுபவிக்கலாம். இதன் பொருள், பிற விஷயங்கள் தவிரவும், உங்களது வரம்புள்ள அனுமதி, உங்களது மூலதேசத்திற்கு நீங்கள் விடுமுறைக்கு எனச் சென்றால் ரத்து செய்யப்படலாம் என்பது.

இறுதியாக, டென்மார்க்கில் உங்களது குடுயிருப்பைக் கைவிட்டு விட்டாலோ அல்லது டென்மார்க்குக்கு வெளியில் அதிக காலம் வசித்து வந்தாலோ, உங்களது இருப்பிட அனுமதி – வரம்பு உள்ளதோ வரம்பற்றதோ – காலவரை நழுவு கொண்டுவிடும்.

நாடு கடத்தி அனுப்பப்படுதல்

வெகுவான சட்ட மீறல் என்ற முறையில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட எந்த வெளிநாட்டுக் குடிமகனும், டென்மார்க்கிலிருந்து நாடு கடத்தி அனுப்பப்படலாம்.

தாய்நாடு திரும்புதல்Audio

வழி காட்டல் மற்றும் நிதியுதவி

ஒரு காலகட்டத்தில் நீங்கள் ஒருகால் உங்களது மூல தேசம் செல்வது பற்றி ஆலோசித்து ஆனால் அவ்வாறு செய்வது நலமானதா என்பதிலோ, அல்லது நீங்களும் உங்கள் குடும்பமும் எவ்விதம் பண விஷயத்தைச் சமாளிக்கக்கூடும் என்பதிலோ தெளிவில்லை என்றால், நீங்கள் டென்மார்க் அகதிகள் சபையிலிருந்து (Dansk Flygtningehjælp) அறிவுரை பெறலாம். மேலாகவும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும், உங்களது மூல தேசத்திலே அல்லது முன்னாள் இருப்பிடம் கொண்ட தேசத்திலே, நிதியுதவி கொடுப்பதற்கு நகராட்சி ஏற்கலாம். 32-ஆம் பக்கத்திலுள்ள '' புதிய குடிமக்களுடைய அறிமுகம் '' என்ற பகுதியையும் பார்க்கவும்.

நகராட்சி அதிகாரத்தின் மதிப்பீடு

உங்களது மூல தேசத்துக்கோ அல்லது முன்னாள் இருப்பிடத்துக்கோ திரும்ப எண்ணம் கொண்டால், உங்களது இருப்பிடத்தின் நகராட்சி மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது நிதி நிலைமையின் மதிப்பீட்டைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை அவர்கள் தீர்மானிப்பார்கள். இந்த உதவியில் பயணச் செலவுகள், வியாபாரத்துக்குத் தேவையான சாதனங்களை வாங்கி அனுப்பும் செலவுகள், உடல் நலக் காப்பீடுகளின் மற்றும் மருத்துவர் எழுதிக் கொடுத்து எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துக்கான செலவுகள் இவற்றுக்கான உதவித் தொகைகள் அடங்கும்.

திரும்பிச் செல்ல உதவி, தேவைகளை பூர்த்தி செய்வதால் அமையும்

குடும்பத்துடன் திரும்பிச் சேரும் நோக்கத்துடன் டென்மார்க் வந்திருந்து, உங்களது இருப்பிட தேசத்துக்கு நீங்கள் திரும்ப விரும்பினால், நீங்கள் எந்தக் குடும்பத்தினருடன் திரும்பச் சேர வந்தீர்களோ அவருடன் சேர்ந்து திரும்புவதாக இருந்தால் மட்டுமே நிதியுதவி தரப்படும்.

ஒரே ஒரு முறைதான் வழங்கப்படும்

உங்களது மூல தேசம் அல்லது முன்னாள் இருப்பிட தேசத்துக்குத் திரும்ப, உதவி ஒரே ஒரு முறைதான் வழங்கப்படும்.

மறு ஒருமைப்பாடு அடைய உதவி

உங்கள் வயது குறைந்த பட்சம் 65 வருடமாக இருந்தாலோ, அல்லது குறைந்த பட்சம் 55 என்பதுடன் நீங்கள் வேலை செய்ய இயலாதவராக இருந்தாலோ, திரும்பவும் ஒருமைப்பாடு அடைய, உதவிக்கு உங்களுக்கு உரிமை உண்டு. இந்தச் சிறப்பு உதவியை நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்து வருட காலத்துக்குப் பெறலாகும். இந்த உதவிக்குத் தகுதியாவதற்கு, நீங்கள் கால வரம்பற்ற இருப்பிட அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது ஐந்து வருடத்திற்கு நீங்கள் டென்மார்க்கில் தொடர்ச்சியாக இருப்பிடம் கொண்டவராக இருக்க வேண்டும்.

  

டென்மார்க் குடிமை (நாட்டுரிமை)Audio

டென்மார்க் சாசனத்தின் கீழ், டென்மார்க் குடிமை வழங்கும் அதிகாரம் பொதுவாக நாடாளுமன்றத்திடம் அமைகிறது. குடிமைச் சட்டங்கள் என்றவாறு அழைக்கப்படுபவற்றை அவ்வப்போது கொண்டு வருவதன் மூலம் இந்த அதிகாரத்தை அது செயல்படுத்துகிறது. ஆகவே டென்மார்க் குடிமைக்குத் தகுதி பெற, நாடாளுமன்றம் ஏற்படுத்திய சில குறிப்பிட்ட அலகுகளின் தேவையை நீங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட டேனிஷ் மொழியறிவு இந்த அலகில் அடங்கும். இதற்கு ஒரு மொழிப் பயிற்சி மையம் அல்லது கல்வி நிறுவனம் தரும் சான்றிதழ் என்னும் ஆவணச் சான்று தேவை. டென்மார்க்கில் தங்கிய காலவரை குறித்த சில தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அடிப்படையில், குறைந்தது ஒன்பது வருடங்கள் நீங்கள் டென்மார்க்கில் தொடர்ந்த இருப்பிடம் கொண்டவராக இருத்தல் அவசியம். நாடற்ற குடிமக்களுக்கும் அகதிகளுக்கும் இதற்குத் தேவையான கால வரை எட்டு ஆண்டுகளே ஆகும். டென்மார்க்கில் குடிமை பெற விண்ணப்பம் செய்பவர், ஒரு சட்ட விரோதக் குற்றச் செயல் புரிந்திருந்தால், குறிப்பிட்ட காலக்கெடு வரை குடிமை பெற இயலாது. சட்ட விரோதக் குற்றச் செயல் கடுமையானதாக இருந்தால், அவர் ஒரு போதும் டென்மார்க் குடிமகன் ஆகவே முடியாமல் போகலாம். பொதுஜன அதிகாரத்திடம் நீங்கள் கட்டாமல் போன தொகைகள், உதாரணத்துக்கு பொதுஜன நல விஷயங்கள், கடன்கள், நபர் மீதான வரிகள், பொருள் மீதான வரிகள் இவை கட்டப்படாமல் இருந்தால், நீங்கள் டென்மார்க் குடிமகனாக முடியாது.

நீங்கள் டென்மார்க் குடிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, உங்கள் வயது 18 ஆண்டுகளுக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தை உங்களது காவல் வட்டத்தின் காவல் துறையிடம் நீங்கள் கொடுக்க வேண்டும். ஒரு விண்ணப்பத்திற்கு மேற்கொள்ளும் வழக்கமான கால அளவையும் காவலர் உங்களுக்குக் கூறுவார்.

அறிவிப்பின் மூலம் சில குடிமக்கள் டென்மார்க் குடிமை பெறலாம். டென்மார்க்கில் பிறந்த குடிமக்கள் மற்றும் பிற நார்டிக் நாடுகளின் குடிமக்கள் தவிரவும், குற்றப் பதிவு இல்லாத, டென்மார்க்கில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்த இளம் வயது வெளிநாட்டுக் குடிமக்களுக்கும் இது பொருந்தும். மேல் விவரங்களும் விண்ணப்பப் படிவமும் நீங்கள் வசித்து வரும் மாநில மாவட்ட அலுவலகத்திலிருந்து* பெறலாம்.

உங்களுக்கு டென்மார்க் நாட்டுரிமை கிடைக்கப் பெற்றுவிடின், நீங்கள் டென்மார்க் பாஸ்போர்ட் வைத்திருக்கவும், தேசியத் தேர்தல்களில் வாக்களிக்கவும் மற்றும் நியமனத்துக்கும் உரிமை பெறுகிறீர்கள்.
 





கடைசி புதுநிலை: 30-06-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை