5. டென்மார்க்கின் புதிய குடிமகனாக ஆரம்ப கால கட்டம்
வேலை தேடுங்கள்
டென்மார்க்கின் இருப்பிட அனுமதி கிடைத்த வெகு நீச்கிரமே, டென்மார்க் சமூகம் பற்றித் தெரிந்துகொள்ள மற்றும் அங்கு செய்ய வேண்டுவனவற்றை மேற்கொள்ள, வழிமுறைகளை நீங்கள் ஆரம்பித்துக்கொள்ள வேண்டும்.
கூடிய விரைவில் நீங்கள் வேலை தேடிக்கொள்ள வேண்டும், ஏனெனில் டென்மார்க் பொதுமக்களின் அன்றாட வாழள்க்கை பெருமளவுக்கு வேலை செய்யுமிடத்தில் நிகழ்கின்றது. மேலும் டென்மாரக் சமூகத்தில் இணைந்து கொள்ளச் சிறந்த வழிகளில் இது ஒன்றாகும். இதன் மூலம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் தாங்கவும் முடியும்.
இருந்தபோதிலும், பல குடிமக்களுக்கு உடனே வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கக்கூடும் - குறிப்பாக, டேனிஷ் மொழியில் தேவையான திறமை இல்லாததால். உங்கள் வாய்ப்புகள் பற்றி மேலும் விவரம் அறிய, 32 மற்றும் 84-ம் பக்கங்களிலுள்ள '' புதிய குடிமக்களுடைய அறிமுகம் '' மற்றும் '' வேலைகளும், தொழிலாளர் சந்தையும்'' இப்பகுதிகளைப் பார்க்க.
நாட்டு மரபு மேல்பள்ளி ஒரு நல்ல ஆரம்பம்
ஒரு நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளியில்* சேர்ந்துகொள்வது நல்லதோர் வழியாகும். இப்பள்ளிகள் டென்மார்க் சமூகம், மக்கள், மொழி இவற்றை நன்கறிய மிகச் சிறந்த வாய்ப்புக்களைத் தருகின்றன. மேலும் விவரங்களுக்கு, 104-ம் பக்கத்திலுள்ள '' டென்மார்க்கில் மக்கள் ஆதரவுக் கல்வி '' எனும் பகுதியைப் பார்க்க.
நகராட்சி வழங்கும் உதவி மற்றும் அறிவுரை
தொடர்ந்து வசிக்கத் தேர்ந்தெடுத்த நகராட்சியிலிருந்து உதவியும் வழிகாட்டலும் பெற, எல்லாப் புதிய குடிமக்களுக்கும் உரிமை உண்டு. நீங்கள் ஒரு அகதியாக இருந்தால், பலவித யோசனைகள், மதிப்பீடுகளைப் பொறுத்து, டென்மார்க் குடியிறக்கச் சேவை* நீங்கள் வசிக்க வேண்டிய நகராட்சியை நிர்ணயிக்கும்.
உங்களது சிவில் பதிவு எண்
இருப்பிட அனுமதி பெற்ற பிறகு, டென்மாரக் தேசிய பதிவேட்டில் (Folkeregistret) உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்வதற்கு, நீங்கள் வசிக்கும் நகராட்சியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அடைக்கலத்துக்கு விண்ணப்பம் செய்திருந்து அதன்பின் உங்களுக்கு இருப்பிட அனுமதி கிடைத்திருந்தால், டென்மார்க் குபடியிறக்கச் சேவை, வசிக்கப் போகும் நகராட்சியில் உங்கள் பெயர் பதிவு ஆவதைக் கவனிக்கும். பதிவான பின், ஒரு சிவில் பதிவு எண் தானாகவே உங்களுக்குக் கிடைக்கும். சிவில் பதிவு எண்ணில் உங்களது பிறந்த தேதி, ஒரு நான்கு இலக்க எண் இவை இருக்கும். ஒரு சிவில் பதிவு எண் இவ்விதம் இருக்கலாம். 23 (தேதி) 04 (மாதம்) 54 (ஆண்டு) – 3476 மகளிருக்குக் கடைசி இலக்கம் இரட்டைப்படையாகவும் இந்த உதாரணத்தில் (6) , ஆண்களுக்கு அது ஒற்றைப் படையாகவும் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் பொது அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும்போதும், உங்களது சிவில் பதிவு எண் தேவைப்படும்.
உங்களது தேசிய உடல்நலக் காப்பீடு அட்டை
நகராட்சியில் பதிவு செய்தான பின், தேசிய சுகாதார சேவையில் உங்கள் பெயர் தானாகவே பதிவாகும், மேலும் உங்களுக்கு தேசிய உடல்நலக் காப்பீடு அட்டையும் கிடைக்கும். பக்கம் 110 பார்க்க.
புதிய குடிமக்களுடைய அறிமுகம்
அறிமுகத் திட்டம்
உங்கள் நகராட்சி உங்களுக்கு ஓர் அறிமுகத் திட்டம் அளிக்க முன்வரும். டேனிஷ் மொழி பயில, மற்றும் கூடிய சீக்கிரம் தற்சார்பில் நிலைபெற உங்களுக்கு உதவுவது இதன் நோக்கம். இந்த அறிமுகத் திட்டம் இலவசம். இது வேண்டுவோர் பெறலாம் என அளிக்கப்படுவதாயினும், நீங்கள் அறிமுக உதவி பெற்று வந்தால், திட்டத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் சேர்ந்துகொண்டு, தொழில் மார்க்கெட்டுக்குத் தயாராக இருக்க வேண்டியது கட்டாயம்.
இந்தத் திட்டம் ஐ.ஓ. * மற்றும் நார்டிக் நாடுகள் இவை நீங்கலாக, பிற நாட்டுக் குடிமக்களுக்கே அளிக்கப்படுகிறது.
தனிநபர் ஒப்பந்தம், பாட வகுப்புகள், செயல் துவக்கும் திட்டம்
அறிமுகத் திட்டத்தில் ஒரு தனிநபர் ஒப்பந்தம், சமூக விஷய மேலும் டேனிஷ் மொழிப் பயிற்சிப் பாடங்கள், செயல் துவக்கும் திட்டம்* இவை அடங்கும்.
தனிநபர் ஒப்பந்தம் உங்களுக்கும் நகராட்சிக்குமான ஓர் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஆகும். இதனை இருவரும் சேர்ந்து வரைய வேண்டியதாகும். உங்களுக்கேற்ற செயல்முறைகள் எல்லாம் இடம் பெறவும் உங்களுக்குத் தேவையானவற்றை வழங்கவும் உறுதிசெய்யும் பொருட்டு, வேறு சிலரும் இந்த ஒப்பந்தத்தை வரைவதில் சேரலாம். இவ்வாறாக, நீங்கள் எந்த மட்டத்தில் டேனிஷ் பாடங்களைத் துவக்க வேண்டும் என்பதனை இவ்வொப்பந்தம் வரையறுக்கலாம். ஒரு கல்வித் திட்டத்தையோ வேலையையோ தேட ஆரம்பிக்கும் முன், உங்களுக்கு வேண்டிய செயல்முறைகள் மற்றும் திறமைகள் இவற்றையும் அது குறிப்பிடலாம். இருப்பிட அனுமதி பெற்று, நகராட்சியின் பரகப்பினுள் ஓர் இடத்தில் வசிக்கவும் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள், இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்படுத்திட வேண்டும்.
தனிநபர் ஒப்பந்தத்தில் வேண்டுவன கேட்டுப் பெறுங்கள்
டென்மார்க்கின் புதிய குடிமகன் என்ற முறையில் உங்களது தனிநபர் ஒப்பந்தம் மிகவும் அர்த்தமுள்ளது. எனவே உங்களுக்கேயான விருப்பங்களுக்கு, அதில் வழியிருக்க வேண்டும் என்பது முக்கியமானது. உதாரணமாக, உங்களது திறமைக்கு உரிய இடம் கொடுக்க, மேலும் உங்களது வல்லமையின் மேம்பாடு உபயோகம் இவற்றுக்குக் குறிப்பாய் வாய்ப்புத் தர, அதில் இடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரு கால கட்டத்தில் உங்களது மூல தேசத்துக்கு, நிலைமை அதற்கேற்ப அமைந்தால், திரும்ப விரும்பலாம் என்பதற்கு இடம் தருமாறு இந்த ஒப்பந்தத்தை அமைக்கலாம். உதரணத்துக்கு, உங்களது மூல தேசத்தில் வேலைக்கு உதவவோ அல்லது அதன் அபிவிருத்தி/திருத்தி அமைக்கும் திட்டங்களில் இடம் பெறவோ உதவும் கல்வித் தகுதியை – நீங்கள் டென்மார்க்கில் இருக்கும்போது – பெற இயலும். பக்கம் 26-ல் உள்ள ''தாய்நாடு திரும்புதல்'' அதனையும் பார்க்க.
பேச்சு மொழி பெயர்க்கும் சேவைகள்
டேனிஷ் மொழியைக் கூடிய விரைவில் கற்றுக்கொள்வது உங்களுடைய பொறுப்பே ஆகும். உதாரணமாக, இலவசமாகத் தரப்படும் டேனிஷ் மொழி வகுப்புகளுக்குச் செல்வதன் மூலம். ஆயினும் பல சந்தர்பங்களில் டேனிஷ் மொழியில் போதிய அளவு பரிச்சயம் இல்லாதவர்கள், பேச்சு மொழி பெயர்ப்பாளர் உதவியைப் பெறலாம். பொது அதிகாரிகள் உங்களது பேச்சு மொழி பெயர்ப்பாளர் தேவையைக் கணக்கிடுவார்கள். அதற்கேற்ப ஏற்பாடு செய்வது அவர்கள் பொறுப்பு.
பேச்சு மொழி போயர்ப்பாளர் நடுவு நிலையானவர்கள்
உங்களது தேவைக்குரிய பேச்சு மொழி பெயர்ப்பாளர் உங்களுக்குத் தரப்படுவார். சொல்பவை அனைத்தையும் முடிந்தவரை சரியாகச் சொல்வதும், மற்றும் வேண்டுமென்றே விஷயங்களை விட்டுவிடாமலிருப்பதும், அவர் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பொது அதிகாரியைப் போலவே, இவரும் எல்லா விஷயங்களிலும் ரகசியம் காப்பதற்கும், நடுவு நிலை வகிப்பதற்கும், ஒருதலைப்பட்சம் இன்றி இருப்பதற்கும் கடமைப்பட்டவர். பேச்சு வார்த்தைகளிலோ, நேர்காணலின் பொழுதோ புரிந்து கொள்வதில் நேரும் தவறுகளைத் திருத்த மட்டும் பேச்சு மொழி பெயர்ப்பாளர் பேச்சில் குறுக்கிடலாம்.
பேச்சு மொழி பெயர்ப்பாளர் மூலம் பேசுவது குறித்த பயனுள்ள அறிவுரை:
- பேச்சு மொழி பெயர்ப்பாளரைப் பார்த்தவாறு பேசாதீர்கள்; யாரிடம் விஷயம் சொல்ல வேண்டுமோ அவரைப் பார்த்தவாறு பேசுங்கள்
- மெதுவாகவும் தேளிவாகவும் பேசுங்கள்
- பேச்சு மொழி பெயர்ப்பாளர் எந்த விஷயங்களை மொழி பெயர்ப்பதை நீங்கள் விரும்பவில்லையோ அவற்றைச் சொல்லாதீர்கள்