7. குடும்பம்
குடும்பமும் சமூகமும்
சம உரிமைகளும் கூட்டுப் பொறுப்பும்
குடும்ப மற்றும் சமுதாய நிலைகளில், தனிநபருக்கு மரியாதை பொது நல நன்மைக்குப் பொறுப்பு ஆகிய கொள்கைகளைக் கொண்டு, டென்மார்க் சமூகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளும் கடமைகளும் உண்டு என்பதும், அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கைகளில் பங்கு கொள்ள, இருபாலருக்கும் சமமாக வாய்ப்பு உண்டு என்பதும் இதன் உள்ளிட்ட பொருள்.
குழந்தைகளும் இள வயதினரும் நல்ல குழந்தைப் பருவமும் வளர்ச்சிப் பருவமும் பெறுவது மேலும் நல்ல கல்வி அடைவது இவற்றிற்கு உறுதி செய்யும் பொறுப்பை, தனிநபரும் குடும்பங்களும் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதும் உள்ளிட்ட பொருளாகும்.
சுய முயற்சியால் தினசரி வாழ்க்கை நடத்துவதில் கஷ்டம் உள்ளோர்க்கு உதவ, சமூகம் பல்வேறு பணிகளை, குடும்பங்களின் மேலும் தனி குடிமக்களின் ஒத்துழைப்புடன், மேற்கொள்கின்றன.
வேலை மிகுந்த வாழ்க்கையை சமாளித்தல் குடும்பத்தில் நேரம் பெரிதளவில் வேலைக்கு ஒதுக்கப்படுகிறது. நிறைய குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறார்கள். அதிலும் ஒரு வாரத்தில் வேலை செய்யும் நேரமும் கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளுடைய பெற்றோர் வேலையிலும் கல்வியிலும் அதிக நேரம் செலவழிக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் குடும்பத்துடன் கழிக்கும் நேரம் குறைவாக உள்ளது - உதாரணமாக, தீவிர உடல்நலக் குறைவுள்ள குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதில். இத்தகைய பணிகளுக்கு விடை காண்பதை, குடும்பங்கள் பொதுஜன அதிகாரிகளிடம் விட்டு விடுவதற்கு இது ஒரு காரணமாகும். இவ்வாறாக, தங்கள் பராமரிப்பை சுயமாக மேற்கொள்ள முடியாத மக்கள், உதாரணத்திற்கு ஊனம், நோய், முதுமை காரணங்களால், பகல் வேலை பராமரிப்பு அல்லது இருப்பிட பராமரிப்பு வசதியை நாடிச் செல்கின்றனர். பல சிறு குழந்தைகள் பகல் வேளை கவனிப்பு நிலையங்களில் அல்லது தனியார் பகல் வேளை கவனிப்பு இடங்களில் கவனித்துக்கொள்ளப்படுகின்றனர். 3-5 வயதுகளில் உள்ள குழந்தைகளில் 90% மேலாக வீட்டுக்கு வெளியே ஏதாவதோர் பகல் வேளை கவனிப்பு இடத்தில் இருக்கிறார்கள். பல பள்ளி வயதுக் குழந்தைகள் பள்ளி - நேரத்திற்குப் - பின் கவனிப்புத் திட்டத்தில் அல்லது பள்ளி - நேரத்திற்குப் - பின் பொழுது போக்கு மையத்திற்குச் செல்கின்றனர். பக்கம் 73 காண்க. இன்று, மிகக் குறைந்த மகளிர் வீட்டில் தங்குகின்றனர். இருந்தபோதிலும், பெரும்பாலான வீட்டு வேலைகளை இப்போதும் மகளிரே செய்கின்றனர். ஆயினும், வீட்டு வேலைகளை அதிக சமமாகப் பகிர்ந்து கொள்வது அதிகரித்து வருகிறது, குறிப்பாக குழந்தைகள் சிறியனவாகவும் தாய் இளவயது, உயர்ந்த கல்வி, வேலை இவைகளுடன் இருக்கும் குடும்பங்களில். வெவ்வேறு குடும்ப வகைகள்
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அநேகமான டென்மார்க் குடும்பங்களில் பல குழந்தைகள் இருந்தன. ஆனால் அடுத்த 100 ஆண்டுகளில், பல குழந்தைகளுடைய குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்தது. அதே சமயத்தில் அநேக மக்கள் தனியாகவோ வேறு ஒரு நபருடனோ மட்டுமோ வாழ்ந்தனர். 1901-இல், ஒரு சராசரி குடும்பத்தில் 4.3 உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் 2000-த்திற்குள் இந்த எண்ணிக்கை 2.2 ஆக இறங்கியது.
பெரியதான மாறுதல்கள் 1960களில் நிகழ்ந்தன. இன்றுகூட, வழக்கமான குடும்பம் என்பது தாய் தந்தை அவர்கள் குழந்தை என்றுதான் உள்ளது. 2000-த்தில் 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 75% தங்களைப் பெற்றெடுத்த இரு பெற்றோருடனும் வசித்தனர். பல மக்கள் சற்றுத் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். பலர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கின்றனர். நிறையவே பேர்கள் விவாக ரத்து செய்து விட்டு, புதிய துணைவர்களைப் பெறுகிறார்கள். இதன் விளைவாக, குழந்தைகள் '' புதிய '' தந்தை அல்லது தாய், மற்றும் மாற்றாந்தாய்/தந்தை வழிச் சகோதரன்/ சகோதரிகள் கொண்ட குடும்பங்களில் வளர்கின்றனர். சில குழந்தைகள் ஒற்றைப் பெற்றோருடன் வசிக்கின்றனர். ஆயினும் அடிக்கடி மற்ற பெற்றோரைப் பார்க்கச் செல்கின்றனர்.
இதன் காரணமாக பல வகைப்பட்ட குடும்ப இணைப்புகள் எழுந்துள்ளன. இவை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தவற்றிலிருந்து வேறான விதத்திலும் அதிகம் மாறுபடும் தன்மையுடனும் இருந்தாலும், இவையும் செயலில் நன்றாகவும் பிணைப்பில் நெருக்கமாகவும் இருக்கக்கூடும்.
2002ல் டென்மார்க்கில் சராசரி 2.2 உறுப்பினர்கள் கொண்ட சுமார் 2.9 மில்லியன் குடும்பங்கள் இருந்தன. அவற்றின் பிரிவு கீழ்க்கண்டவாறு. 14%: குழதைகள் உடைய திருமணமான ஜொடிகள். 4%: குழந்தைகள் உடைய பிர சேர்ந்த-வசிக்கும் ஜொடிகள் 21%: குழந்தைகள்ற்ற திருமணமான ஜொடிகள். 6%: குழந்தைகள் பிர சேர்ந்த-வசிக்கும் ஜொடிகள். 4%: குழந்தைகள் உடைய ஒற்றைப் பெற்றொர் 49%: ழந்தைகள் உடன் இல்லாத ஒற்றைப் பெற்றொர் ஆதாரம்: Danmarks Statistik. நிரந்தரமான உறவுகள்
திருமணம்
இருவரும் 18 வயது எய்தியிருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். 18 வயதுக்குக் குறைவான இளைய மக்கள், திருமணத்திற்கு அவ்விடத்தின் மாநில மாவட்ட அலுவலகத்தில்* விசேட அனுமதிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, டென்மார்க்கில் குடும்பம் ஒன்று சேர்தல் விதிகளின்படி, அவருடன் ஒன்று சேர விரும்பினால் அதற்கு விசேட விதிகள் உள்ளன. திருமணத்திற்கு, நீங்கள் ஏற்கனவே கல்யாணமானவராக இருக்கலாகாது. நீங்கள் சகோதரனை அல்லது சகோதரியை தவிரவும், நேர் தலைமுறையில் உள்ள – அதாவது பெற்றோர், மக்கள், பாட்டன்-பாட்டி – உறவினர்களை மணம் புரியலாகாது.
எவரையும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது
மேற்கூறிய விலக்குகள் தவிர, எவரையும் மணம் செய்து கொள்ள உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. டென்மார்க்கில், திருமணங்கள் தன்னிச்சையாகச் செய்து கொள்ளப்படுகின்றன. எனவே விருப்பத்திற்கு எதிராக எவரையும் கட்டாயத் திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமானது. கட்டாயத் திருமணங்களை ரத்து செய்ய முடியும்.
நகர அரங்கம் அல்லது தேவாலயம்
திருமணத்தைச் சிவில் முறையிலோ, சமயச் சடங்கு முறையிலோ செய்யலாம். சிவில் திருமணச் சடங்கு மேயரால் நடத்தி வைக்கப்படும். சமயச் சடங்கு, டென்மார்க் தேசிய தேவாலயத்தின் பாதிரியாரால் அல்லது திருமணச் சடங்குகள் செய்ய அதிகாரமளிக்கப்பட்ட வேறு மதச் சமூகத்தின் மதகுருவால் செய்யப்படும்.
வேறு நாடுகளில் செய்துகொள்ளப்பட்ட திருமணங்களும், டென்மார்க் மணங்களைப் போலவே, டென்மார்க் நீதித் துறையில் ஏற்புடையன.
ஒருவரை ஒருவர் பராமரிக்க கடமை
திருமணத் தம்பதிகளாக, ஒருவரையொருவர் பொருளாதார ரீதியில் ஆதரிப்பது கடமையாகும். இதற்குப் பரஸ்பர பராமரிப்பு என்று பெயர். எளிய விதியாகச் சொன்னால், எல்லா உடைமைகளும் இருவருக்கும் சொந்தமானவை. குழந்தைகள் இருந்தால், தானாகவே இருவருக்கும் பொறுப்புரிமை அமைகிறது.
திருமணம் இல்லாத உறவுகள்
சேர்ந்து வசிக்கத் தீர்மானித்த இருவர், திருமணம் ஆகாமலே குழந்தைகள் பெற்றுக் கொண்டால், அவர்களது திருமண் சான்றிதழ் இல்லாத மணம் எனப்படும்.
சான்றிதழ் இல்லாத மணத்தில் வாழும் மக்களுக்கு, திருமணம் ஆனவர்களுக்கு இருப்பது போன்ற, ஒருவருக்கொருவரான சட்ட மற்றும் நிதி சம்பந்தமான பொறுப்புகள் தானாகவே அமையாது. குறிப்பாக, பிரிந்து போகத் தீர்மானிக்கும் நிலையில், கணவன்-மனைவியருக்கு இது முக்கியமாகிறது.
பொறுப்புரிமை
சட்டபூர்வமான மணம் இன்றி உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், பெற்றோர்கள் சேர்ந்து பொறுப்புரிமைக்கு ஒப்பாவிடில், குழந்தையின் பொறுப்புரிமை*, தாய்க்கே அளிக்கப்படும்.
மணமற்ற உறவை முடிக்க வழக்குத் தொடுப்பு தேவைப்படலாம்
சான்றிதழ் இல்லாத மணமுடைய இருவர் பிரிந்தால், இரு பட்சத்தினருமே தங்களுக்குள் கூட்டு உடைமைகளை எவ்விதம் பகிர்ந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கடன்கள் இருந்தால் அவரவரே பகுதியை அவரவே அடைக்க வேண்டும். குழந்தைகள் எங்கு வசிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். உடைமைகள் பிரித்துக் கொள்வது பற்றித் தங்களுக்குள் உடன்பாடு செய்துகொள்ள இயலாவிடில், இவ்விஷயம் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படவேண்டும். குழந்தைகள் யாருடன் வசிப்பார்கள் என்பது பற்றி உடன்பாடு செய்துகொள்ள இயலாவிடில், அவர்கள் அறிவுரை பெற, மாநில மாவட்ட அலுவலகத்துடன்* தொடர்பு கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட சேர்க்கைகள்
டென்மார்க்கில், ஓரினப் பாலியல் உறவு கொள்வோருக்கு எல்லாக் குடுமக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் கடமைகளும் உண்டு. மற்றும் அவர்கள் பதிவு செய்யப்பட்ட சேர்க்கைக்கு உரிமை உள்ளவர்கள். திருமணம் போலவே இதுவும் சட்டத்துக்கு உட்பட்டது.
சட்ட பூர்வமான பிரிவும் விவாகரத்தும்
மணமான எவருக்கும், மணமான நிலையில் தொடர்ந்து வாழ விரும்பாவிடில், சட்ட பூர்வமான பிரிவுக்கு உரிமை உண்டு. சட்டபூர்வமான பிரிவு ஒரு வகைப் பரிசோதனைக் காலமாகும். அப்போது, தனித்தனியே வாழ்ந்தாலும் அவர்கள் கணவன் மனைவியே. ஒரு வருடத்து சட்டபூர்வமான பிரிவுக்குப் பின், அவர்கள் விவாக ரத்து பெறக்கூடும். இருவருமே விவாக ரத்து வேண்டி நின்றால், ஆறு மாதத்திற்குப் பின் அது கிடைக்கலாம்.
பிறன் மனை நாடல் அல்லது துன்புறுத்தல் இருந்திருப்பின், சட்ட பூர்வமான பிரிவு இல்லாமலே, விவாக ரத்து நேராகத் தரப்படும்.
கூட்டுப் பொறுப்புரிமை
மணவாழ்வில் குழந்தைகள் இருந்திருந்தால், பெற்றோர் பொறுப்பை எப்படிப் பகிர்வது என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும். விவாக ரத்து நிபந்தனைகள் பற்றி அவர்களுக்குள் உடன்பாடு கொள்ளாவிட்டால், அறிவுரைக்கு அவர்கள் மாநில மாவட்ட அலுவலகத்துடன்* தொடர்பு கொள்ளலாம். கடைசிப் பட்சமாக, இந்த வழக்கு நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டும்.
சட்ட பூர்வமான பிரிவு மற்றும் விவாக ரத்து கோருவோர் அவ்விடத்தின் மாநில மாவட்ட அலுவலகத்துடன்* தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் கோபன்ஹேகனில் வசித்து வந்தால், கோபன்ஹேகன் ஆளுநர் அலுவலகத்துடன்* தொடர்புகொள்ள வேண்டும். சட்டபூர்வமான பிரிவு, விவாக ரத்து, குழந்தை பொறுப்புரிமை, கூட்டு உடைமை பங்கீடு, குழந்தைக்கு அல்லது முன்னாள் மனைவி அல்லது கணவனுக்கு நிதியுதவி ஆகியவை குறித்த விதிகள், நிபந்தனைகள் பற்றி அங்கு நீங்கள் விவரம் பெறக்கூடும்.
குழந்தை பராமரிப்பு ஆதரவு
எந்தப் பெற்றார் குழந்தையுடன் வாழவில்லையோ, அவர் குழந்தை பராமரிப்பு ஆதரவுத் தொகையை மற்ற பெற்றோருக்குக் கொடுக்க வேண்டும். இதற்கு குறைந்த பட்சத் தொகை உள்ளது. ஆனால் நீங்கள் விரும்பினால் அதிகமாக கொடுக்கலாம். பொதுவாக, குழந்தை பராமரிப்பு ஆதரவுத் தொகையின் மீது வரி விலக்கு உண்டு.
இலவச கருக்கலைப்பு 1973-ஆம் ஆண்டிலிருந்து டென்மார்க் இலவச கருக்கலைப்பு வழங்கி வந்துள்ளது. கருத்தரித்த 12 வாரங்கள் வரை எந்தப் பெண்ணுக்கும் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு சட்டபூர்வ உரிமை உண்டு. அசாதாரண நிலையில், கருத்தரித்த 12 வாரங்களுக்கு மேலாகவும், கருக்கலைப்பு செய்து கொள்ளக்கூடும். நீங்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளத் தெரிவு செய்தால், உங்கள் பொது மருத்துவரிடமிருந்து மருத்துவமனைக்கு ஒரு சான்றாதாரம் கேட்டு வாங்க வேண்டும். வழக்கமாக, செயற்கையாகத் தூண்டப்படும் கருக்கலைப்பு, பொது - உணர்ச்சி - நீக்க மருந்து கொடுத்த பின் செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும். நீங்கள் மருந்து முறை கருக்கலைப்பும் (அதாவது மருந்து உட்கொள்வதனால் தூண்டப்படும் கருக்கலைப்பும்) மேற்கொள்ளலாம். கருக்கலைப்பு வேண்டுமா என்ற நிர்ணய உரிமை முழுவதும் பெண்ணுக்கே உரியது. ஓர் ஆண்டு கணக்கில், டென்மார்க்கில் 15,000 முதல் 20,000 வரையிலான அளவில் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. சிலருக்கு இது மிக அதிகம் என்று தோன்றுகிறது. ஓர் உயிரை முடிப்பது அறநெறிக்குப் புரண் என்பது கருக்கலைப்பைக் கண்டிக்கும் ஒரு வாதம். பெண்களால், வேண்டாத குழந்தை பிறப்பைத் தவிர்க்க முடிய வேண்டும் என்பதும், அவர்கள் சட்டபூர்வமற்ற கருக்கலைப்பால் தங்கள் உயிருக்கு அபாயம் விளைவித்துக்கொள்ளக் கூடாது என்பதும், டென்மார்க் கருக்கலைப்பு சட்டத்திற்கு காரணாய் அமைந்த கொள்கைகள் ஆகும். சமூகம் எப்போது முன்வந்து கைகொடுக்கும்
எவரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக் கூடாது
வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடப்பன தனிப்பட்ட நபர்களின் விஷயம். இதில் மாநில அரசோ நகராட்சியோ குறுக்கிடுவதற்கில்லை. ஆயினும் எந்த குடிமகனும், குழந்தைகளாக இருந்தாலும் சரி வயது வந்தவர்களாக இருந்தாலும் சரி, குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தலுக்கோ தவறு இழைப்புக்களுக்கோ ஆளாக்கப்படக் கூடாது. எவரேனும் அடிக்கப்பட்டால், பயமுறுத்தப்பட்டால் அல்லது உடலுறவுக்குக் கட்டாயப்படுத்தப் பட்டால், நகராட்சி அதிகாரம் அல்லது உங்கள் அருகாமையில் இருப்பின் ஒரு புகலிடம்/பாதுகாப்பு இடத்திடம் அல்லது அறிவுரை மையத்திடம் நீங்கள் உதவியை நாடலாம்.
அவசரகால ஆலோசனை மற்றும் புகலிடங்கள்
அவசர நெருக்கடி காலத்தில், அடுத்து செய்ய வேணஅடியதை மேற்கொள்ளும் முன்னர், நீங்கள் ஒரு புகலிடம் அல்லது காப்பிடத்துக்குச் சென்று தங்கலாம். உங்களுக்கு சமூக, மனநல மருத்துவ, கல்வி ரீதியான உதவிகள் கிடைக்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் டென்மார்க்கில் எல்லா இடங்களிலிலும் புகலிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், துன்புறுத்தும் கணவன்கள், தவறு இழைக்கும் பிறரிடமிருந்து காக்க, பெண்களுக்கே அநேகமான புகலிடங்கள் உள்ளன.
பிரச்சனை ஆபத்தாக மாறும் முன் உதவி நாடுங்கள்
விஷயம் முற்றி புகலிடம் தேடும் நிலை வருவதற்கு முன்னரே, நீங்கள் உதவி நாடுவது முக்கியம். உதவி தேவையானால், நகராட்சி அதிகாரம் அல்லது அறிவுரை மையத்திடம் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பெயர் வெளியே தெரியவேண்டா உரிமை அங்கு காக்கப்படும்.
ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஆதரவு
இதன் குறிக்கோள் உடல் அல்லது மனம் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் வயது வந்தவர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் அன்றாட வாழ்க்கையின் சௌகரியத்திற்கான ஆதரவுக்கு உரிமை. ஊனமுற்ற மக்கள் இயன்ற அளவில் செயல்கள் புரிந்து சாதாரண மக்களைப் போல வாழ வைப்பது இந்த ஆதரவின் நோக்கம். நகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரங்கள் ஊனமுற்றோர் சம்பந்த ஆலோசகர்களை நியமித்துள்ளன. அவர்கள் ஊனமுற்றோருக்கான உதவிக் கருவிகள், சாதனங்கள், இருப்பிடம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி அறிவுரை, வழிகாட்டல் இவற்றைச் செய்கிறார்கள்.
சிறப்பு வசதிகள்
அநேக ஊனமுற்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்தவாறு, பொது இளஞ் சிறார்ப் பள்ளி, பள்ளி, பள்ளி - நேரத்துக்குப் பின் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆயினும், சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்களால் கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படும் விசேட இளஞ் சிறார்ப் பள்ளி, பள்ளிகளுக்கு சிலர் செல்கிறார்கள்.
தனிப்பட்ட கல்வி, பகல் நேர அல்லது இருப்பிட கவனிப்பு மையங்கள், பிற இடங்கள், பாதுகாப்பான பயிற்சி முகாம்கள், வேலை இடத்து வசதிகள் இவை ஊனமுற்ற இளம் வயதினருக்கும் வயது வந்தோர்க்கும் தரப்படுகின்றன.
சில ஊனமுற்ற மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் வாழ்ந்தவாறு, நகராட்சி அதிகாரத்திடமிருந்து, தனிநபர் மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு ஆதரவு பெறுகிறார்கள். பிறர் வசிப்பது விசேட நிறுவனங்கள், கூட்டாக வீடு/ஃபிளாட்கள், தங்கும் வசதி இருப்பிடங்கள் இவற்றில்.
குழந்தை பிறப்பு
பிரசவத்துக்கு - முன் மருத்துவர், செவிலியர் செய்யும் சோதனைகள்
எல்லா கருத்தரித்த பெண்களுக்கும் மருத்துவர் மற்றும் பேறு கால உதவிச் செவிலியரால் நடத்தப்படும் தொடர்ச்சியான மருத்துவ சோதனைகளுக்கு உரிமை உண்டு. கருத்தரித்த ஒன்பது வாரங்களில் முதல் முறை உங்கள் மருத்துவரைக் காணச் செல்வீர்கள். இவ்வருகைக்கு நீங்கள் முன்னர் நேரம் நிச்சயித்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கும் குழந்தைக்கும் மருத்துவப் பதிவுக் குறிப்பு
மருத்துவர் உங்கள் கருத்தரிப்பின் மருத்துவப் பதிவுக் குறிப்பு செய்வார். நீங்கள் -பிரசவத்துக்கு முன், மருத்துவரை மற்றும் பேறுகால உதவிச் செவிலியை ( மிட்வைஃப் ) பார்க்க வரும்போதெல்லாம் அதனை உடன் எடுத்துவர வேண்டும். அந்தப் பதிவில், மருத்துவரும் பேறுகால உதவிச் செவிலியும் உங்கள் கருவளர்ச்சி நிலைகளை குறித்துச் செல்வார்கள். உங்கள் மற்றும் குழந்தையின் நலத்தை அறிவதும், ஏதேனும் பிரச்சனை இருப்பின், அதனை துவக்கத்திலேயே தெரிந்து கொள்வதும் இதன் நோக்கம் ஆகும்.
சில மாவட்டங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்* வசதி உண்டு. குழந்தைக்கு ஏதேனும் பௌதிகமான உறுப்புக் கோளாறு உள்ளதா, பிற சிக்கல்கள் உள்ளனவா என்று அறிய இந்த ஆய்வு வழி செய்கிறது. இதனைச் செய்வதை ஏற்பதோ மறுப்பதோ அது உங்கள் முடிவு.
உங்களது எல்லா பிரசவத்துக்கு - முன் வருகைகளிலும், உங்கள் கணவரையோ அல்லது உங்கள் நண்பர், தாய் போன்ற வேறு எவரையோ, உடன் அழைத்து வரலாம்.
பிரசவத்துக்கு முன்
பேறு காலத்துக்கு முந்தைய வகுப்புகளில் பாடம் பெறுவது உங்களுக்கு, முக்கியமாக முதல் குழந்தையாக இருந்தால், நன்மை பயக்கலாம். கருத்தரிகையில் உங்கள் உடலுக்கு என்ன நேருகிறது, குழந்தை எவ்விதம் வளர்ச்சி பெறுகிறது இவை பற்றி வகுப்பில் அறிய வருவீர்கள். மூச்சுப் பயிற்சியும் உடற் பயிற்சியும் கற்பீர்கள். குழந்தை பிறப்பதை எளிதாக்கவும், வலியைக் குறைக்கவும் அவை உடலைப் பழக்குகின்றன. நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் கிடைக்கும் பிரசவத்துக்கு முன் வகுப்புகள் பற்றி உதவிச் செவிலியிடம் விசாரியுங்கள்.
வகுப்புகளுக்கு உங்கள் கணவரையும், குழந்தை பிறக்கையில் கூட இருக்க அவரையோ உங்கள் விருப்பப்படி வேறு எவரையோ அழைத்து வரலாம்.
வீட்டில் குழந்தை பிறப்பு
குழந்த பிறப்பை வீட்டிலா அல்லது மருத்துவ மனையிலா வைத்துக் கொள்வது என்ற தெரிவை அநேக குழந்தைப்பேறு பிரிவுகள் உங்களுக்கு வழங்குகின்றன. குழந்தை பிறப்பது வீட்டில் என்று நீங்கள் கொண்டால், குழந்தைப் பேறு பிரிவின் ஒரு பேறுகால உதவிச் செவிலி, குழந்தை பிறக்கையில் வீட்டிற்கு வந்து உங்களுக்கு உதவுவாள். இந்தத் தெரிவை வழங்காத குழந்தைப் பேறு பிரிவுகள், இவ்வசதி வழங்கும் மற்றோர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள். சில மாவட்டங்களில் சிறப்பு வீட்டுக் குழந்தைப் பேறு திட்டங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக நியமிக்கப்பட்ட பேறுகால உதவிச் செவிலியர், கர்ப்ப கால சோதனைகள், குழந்தை பிறப்பு இரண்டிலும் பொறுப்பேற்றுக் கொள்வர்.
ஐயம் இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது பேறுகால உதவிச் செவிலியருடன் தொடர்பு கொள்ளுங்கள் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு மருத்துவரும், பேறுகால உதவிச் செவிலியும் பதில் தருவார்கள். எனவே, எது பற்றிச் சந்தேகம் இருந்தாலும், உதாரணமாக, பிரசவ சமயத்தில் உடல் கொள்ளக் கூடிய நிலை, வலியை எப்படி குறைப்பது போன்றவை, தயக்கமின்றிக் கேளுங்கள். முக்கிய விஷயம் எதையும் மறவாதிருக்க, மருத்துவர் அல்லது பேறுகால உதவிச் செவிலிடைத் தொடர்பு கொள்ளும் முன், கேள்விகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எவ்வகை பிரசவம் விரும்புகிறீர்கள், பிரசவத்திற்குப் பின் உங்களுக்குத் தேவையானவை, உதாரணமாக குறிப்பிட்ட உணவு வகைகள், இவற்றை நீங்கள் மருத்துவ மனைஅல்லது சிகிச்சை
மனைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
பிரசவம் ஆரம்பிக்கையில்
பிரசவம் ஆரம்பமாகிறது என்று நீங்கள் கருதுகையில், மருத்துவமனையின் குழந்தைப் பேறு பிரிவினை தொலைபேசியில் அழையுங்கள். நீங்கள் உடனே மருத்துவ மனைசெல்ல வேண்டுமா அல்லது பின்னர் தொடர்பு கொண்டால் போதுமா என்று அவர்கள் கூறுவார்கள். மருத்துவமனை செல்ல வாகன வசதியை நீங்களேதான் செய்துகொள்ள வேண்டும். உங்களது ஒப்பனை சாதனங்களின் பை, பிறந்த குழந்தைக்கு உடைகள் இவற்றை ஞாபகமாக எடுத்து வாருங்கள்.
தந்தை உடன் இருக்கலாம்
பிரசவம் மிக முக்கிய நிகழ்ச்சி. உங்களுக்கு வேண்டியவர் எவருடனோ இந்நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதை நீங்கள் விரும்பலாம். பல தந்தைகள் பிரசவ சமயத்தில் கூட இருக்க விரும்புவர். அது இயலாவிட்டால், உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரைத் துணைக்கு அழைக்கலாம்.
உங்கள் தெரிவு
ஒரு குறிப்பிட்ட முறையில்தான் நீங்கள் பிறப்பு நிகழ்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. உலாவுவதோ, உட்காருவதோ, படுப்பதோ எதையும் பிரசவ காலத்தில் உங்கள் விருப்பப்படி செய்யலாம். பல மருத்துவ மனைகளில் வெதுவெதுப்பு நீர்த் தொட்டிகள் வழங்குவதற்கும் வசதி உண்டு. பலவித வலி குறைப்பு சிகிச்சைகளும் நீங்கள் பெறலாம். பேறுகால உதவிச் செவிலி உங்களுக்கு எது சிறந்தது என்று தீர்மானிப்பாள். சிசேரியன் அறுவைச் சிகிச்சை உங்களுக்கு அவசியமானால், பொது அல்லது ஓரிட உணர்வு நீக்கி மருந்துகள் நீங்கள் பெறலாம்.
முதல் முக்கிய தொடர்பு
தாய்-சேய் முதல் பௌதிகத் தொடர்பு மிக முக்கியமானது. எனவே பேறுகால உதவிச் செவிலி, குழந்தை பிறந்த உடன் உங்கள் வயிற்றின் மீது வைத்துக் கொள்ள விருப்பம் உண்டா என்று உங்களிடம் கேட்பாள். குழந்தை பிறந்து கூடிய விரைவிலேயே முலைப்பால் தர விழைவது நல்லது. ஏனெனில் தாப்பால் தருவதைத் தொடங்குவது அதனால் எளிதாகும். தவிரவும் முலைப்பாலில் குழந்தைக்குத் தேவையான சத்து மற்றும் நோய் தடுக்கும் குணம் அடங்கியுள்ளது. உங்களுக்கு முலைப்பால் தர விருப்பம் இல்லாவிடில் பேறுகால உதவிச் செவிலியிடம் அதைக் கூறுங்கள்.
பிரசவத்திற்கு பின் மருத்துவப் பிரிவில்
பிரசவம் ஆன பின், நீங்களும் குழந்தையும் பிரசவத்துக்குப்-பின் பிரிவில்* ஒரு அறைக்குச் செல்வீர்கள். புதுக் குழந்தையை நீங்கள் கவனித்துக் கொள்வதில் பணியாளர்கள் அங்கு உதவுவதுடன் முலைப்பால் தருவது, குளிப்பாட்டுவது, தேவைகளை கவனிப்பது பற்றி ஆலோசனை தருவார்கள்.
பிறப்புச் சான்றிதழ், பெயர் வைப்பது, ஞானஸ்னானம்
குழந்தை பிறக்கையில் பெற்றோர்களுக்கு ஒரு படிவம் வந்து சேரும். அதனை நிரப்பி குழந்தை பிறந்த இடத்தின் தேவாலய அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம். அதன்பின் தேவாலய அலுவலகம் பிறப்புச் சான்றிதழ் தரும். புதிதாய்ப் பிறந்த எல்லாக் குடிமக்களும், எந்த மதச் சார்பு இருப்பினும், டென்மார்க் அரசின் சார்பாக டென்மார்க் தேசிய திருச்சபை* அதனில் பதிவு செய்யப்படும்.
அனைத்து பிறந்த குழந்தைகளையும் டென்மார்க் தேசிய திருச்சபை பதிவு செய்கிறது
டென்மார்க் தேசிய திருச்சபை அனைத்து புதிய குழந்தைகளின் பெயரையும் பதிவு செய்கிறது. ஆகவே குழந்தையின் வயது ஆறு மாதம் ஆவதற்குள், அதன் பெயரை தேவாலய அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அப்போது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒன்றும் பெயர்ச் சான்றிதழ் ஒன்றும் கிடைக்கும். ஞானஸ்னானம் சடங்கின் போதும் குழந்தைக்குப் பெயர் வைப்பதுண்டு. இதனை டென்மார்க் தேசிய தேவாலயத்தின் பாதிரியார் செய்வார். மற்ற மதத் தொகுதிகளின் குருமார்களும் செய்யலாம். இம்முறையினால், குழந்தைக்கு ஒரு பெயர், பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும். அந்தச் சான்றிதழ் பின்னர், உதாரணத்திற்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கையில், அவசியமாகும்.
ஆமோதிக்கப்பட்ட முதல் பெயர்களையே பயன்படுத்தலாம்
முன்னேற்றத்துக்குத் தடங்கல் தரக்கூடிய அல்லது பிறர் சீண்ட வாய்ப்புண் தரக்கூடிய ஒரு முதல் பெயரை நீங்கள் குழந்தைக்கு வைக்க அனுமதி இல்லை. டென்மார்க் மத விவகார அமைச்சகம் (Kirkeministeriet) ஆமோதிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலை அலுவலகச் சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது. அதனை அமைச்சகத்தின் இணைய தள அக-ஏட்டிலிருந்து பெறலாம். சுற்றறிக்கையில் இல்லாத பெயரை குழந்தைக்கு வைக்க நீங்கள் மத விவகார அமைச்சகத்திற்கு (உங்கள் தேவாலய அலுவலகத்தின் வழியாக) விண்ணப்பிக்க வேண்டும்.
முன் வேறு நாட்டின் குடிமக்களாக இருந்த எந்தப் பெற்றோருக்கும் டென்மார்க்கில் ஆமோதிப்பு இல்லாத பெயரை வைக்க உரிமை உண்டு. ஆனால், அப்பெயர் ஒரு அல்லது இரு பெற்றோரின், சொந்த நாட்டில் பொதுவில் வழங்கப்படும் பெயராக இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கு பேறுகால விடுப்பு, பெற்றோர் விடுப்பு
பெண்களுக்கு கருத்தரித்த, பிரசவ காலங்களில், விடுப்பு கிடைக்கும். இதில் பிரசவத்துக்கு முன், பின் கால வரையரை உண்டு. அது போலவே குழந்தையின் தந்தைக்கும் குறிப்பிட்ட பேறுகால விடுப்பு கிடைக்கும். பொது ஜன அதிகாரங்களும் தனியார் கழகங்களும் கணவன் மனைவி ஊதியத்துடன் பேறுகால விடுப்பு பற்றி ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. விடுப்பு காலத்தில் ஊதியம் அல்லது சம்பளம் கிடைக்காத பெற்றோர் நகராட்சி அதிகாரத்திடமிருந்து தாய்/தந்தை பேறுகால உதவி கோரலாம். குறைந்தது ஆறு மாதங்களாவது சொந்தத் தொழில் செய்யும் தன் நிர்வாக மக்களுக்கும் இது பொருந்தும். இதற்கு மேலாக, சிறு வயதுக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெற்றோர் விடுப்பும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு உங்கள் நகராட்சியின் சமூக மற்றும் சுகாதார நிர்வாகத் துறையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
சுகாதார வருகையாளரின் வீட்டு வருகைகள்
உங்களுக்கு, சுகாதார வருகையாளரின் இலவச பிரசவத்துக்குப் பின் வீட்டு வருகைகளுக்கு, உரிமை உண்டு. வழக்கமாக, தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஒரு மாதம் முடிந்து ஒரு வாரத்துக்குள், முதல் வருகை நிகழும். அதன் பின்னர், வருகைக்கான நேரங்களை அவர் உங்களுடன் அவ்வப்போது நிச்சயித்துக் கொள்வார்.
குழந்தை முன்னேற்றத்தின் கண்காணிப்பு
நீங்களும் குழந்தையும் சேர்ந்த மிகச் சிறந்த தொடக்கம் அதனை உறுதி செய்யும் வகையில், அறிவுரை தருவதும் வழிகாட்டுவதும், சுகாதார வருகையாளரது பணி. பார்வையிட்டும் எடையை கவனித்தும், அவர் குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பார். குழந்தையின் எதிர்வினைத்திறம், உணவினால் பெற்ற நன்னிலை இவற்றையும் மொழி அறிவு நிலை, உறுப்பு இயக்கத் திறம் இவற்றையும் அவர் சோதிப்பார். குடும்ப நலம் மொத்தத்தில் கருதும் அவரால் குழந்தை முன்னேற்றம் பற்றி ஆலோசனைகள் தர இயலும். ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், உங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் தருவார். சுகாதார வருகையாளர்கள் தொழில் திறம் வாய்ந்த செவிலியர், அதிலும் அதிகப் பயிற்சி பெற்றவர். எனவே உடல் நலம் குன்றிய குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் முறைகள் பற்றியும், அவர் உங்கள் கேள்விகளுக்கு பதில் தர இயலும்.
பொது மருத்துவர் மூலம் சோதனை
உங்கள் பொது மருத்துவர் மூலம், பல இலவச மருத்துவ சோதனைகள் செய்து கொள்ளும் உரிமை, உங்கள் குழந்தைக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு 113-ஆம் பக்கம் பார்க்க.
தாய்-சேய் தொகுதிகள்
உங்கள் வீட்டு அருகாமையில் ஏறக்குறைய அதே நேரத்தில் குழந்தை பெற்ற பெண்மணிகளைக் கொண்ட தாய்-சேய் தொகுதிகளை உங்கள் சுகாதார வருகையாளர் அமைக்கலாம். அவற்றில் சேர விருப்பம் உள்ள அன்னையர் ஒவ்வொருவர் வீட்டில் ஒரு முறை என்று கூடி அவரவர் அனுபவங்களைப் பேசிப் பகிர்ந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் சொல்லை செவிமடுங்கள். அவர்களுக்கு ஆதரவும் உற்சாகமும் தாருங்கள் டென்மார்க்கில் குழந்தைகள் பொதுவாக தனிநபர் என்ற முறையில் நோக்கப்படுகிறார்கள். அவர்கள் சொல்ல வருவதைக் கேட்பது. இள வயதிலிருந்தே அவர்களுக்கு விளைவு தரும் விஷயங்களில் அவர்கள் நிர்ணயத்துக்கு இடமளிப்பது அந்த முறையில் அடங்கும். குடும்பங்களும் பகல் நேர கவனிப்புக் கழகங்கள் மற்றும் பள்ளிகளும், குழந்தைகளின் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் தக்கவாறு, பொறுப்பு ஏற்பது, பிறர் நலம் கருதுவது இவற்றின் போதனைக்கு முக்கியத்துவம் தருகின்றன. டென்மார்க் சட்டத்தின்படி, குழந்தைகள் ஆதரவுக்கும் பாதுகாப்புக்கும் உரிமை உள்ளவர்கள். மற்றும் அவர்கள் தனிநபர் தன்மைக்கும் மதிப்புத் தர வேண்டும். குழந்தைகளைத் தாக்குவதும், பிற துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதும் சட்ட விரோதமானவை, தண்டனைக்குரியவை. இளம் பெண்களின் பிறப்புறுப்பில் தோல் நீக்குவது அது ஊனம் செய்யும், தீவிர விளைவுகள் தரும் செயல். இச்செயலும் அவ்வாறே சட்டக் குற்றம். 115-ஆம் பக்கத்திலுள்ள விஷயக் கட்டத்தையும் பார்க்க. குழந்தைகளும் இளைய மக்களும்
பகல் நேர மழைலையகம் பகல் நேர கவனிப்பு, பகல் நேர இளஞ்சிறார் பள்ளிகள்
ஆறு வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து, உதாரணமாக குழந்தை கவனிப்பாளர் பாதுகாப்பில், பகல் நேர மழலையகம் (Vuggestue) அல்லது இளஞ்சிறார் பள்ளியில் (Børnehave), பகல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பகல் நேர கவனிப்பு வசதியில் பல வகைகள் உள்ளன. நகராட்சி அதிகாரம் பகல் நேர கவனிப்புக்குப் பொறுப்பு ஏற்கிறது. நகராட்சியைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், பொதுவில் இந்த வசதிகள் இடம் பெரும்:
- நகராட்சி பகல் நேர கவனிப்பு. இம்முறையில், தனியார் வீட்டில், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து, நகராட்சி அங்கீகரித்த குழந்தை கவனிப்பாளரால் குழந்தைகள் பார்த்துக் கொள்ளப்படும். வயது: 0 முதல் 3 ஆண்டுகள்.
- பகல் நேர மழலையகம். வயது: 0 முதல் 3 ஆண்டுகள்.
- இளஞ் சிறார் பள்ளி. வயது: 3 முதல் 6 ஆண்டுகள்.
- வெளியில் அமைந்த இளஞ் சிறார் பள்ளி. வயது: 3 முதல் 6 ஆண்டுகள். இதில் குழந்தைகள் பகல் நேரத்தை ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியிலோ கழிப்பர்.
- எல்லா வயது குழந்தைகளுக்குமான பகல் நேர கவனிப்பு கழகம். இது 0 முதல் 6 வயதுக் குழந்தைத் தொகுப்பு வசதி.
- சொந்த விருப்ப திட்டம். இத்திட்டத்தின் கீழ், சில நகராட்சிகள் தனியார் முறையில் குழந்தை கவனிப்பு செய்து கொள்ளும் பெற்றோருக்கு நிதியுதவி தருகின்றன.
இடத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
உங்கள் நகராட்சியின் பகல் நேர கவனிப்புத் துறையில் உங்கள் குழந்தையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சி அதிகாரம் உங்களுக்கு உடநே இடம் தர இயலாவிடில், உங்கள் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இடப்படும். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் குழந்தையின் பெயரைக் காத்திருப்போர் பட்டியல் இடுகின்றீர்களோ அவ்வளவு உங்களுக்குப் பிடித்த பகல் நேர கவனிப்பு வசதியில் இடம் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும். குழந்தை பகல் நேர மழலையகம் செல்வது உங்கள் விருப்பமானால், குழந்தை பிறந்த உடனாகவே காத்திருப்போர் பட்டியலுக்குப் பெயரைத் தரவும்.
நீங்கள் மற்றொரு நகராட்சிக்கு குடி பெயர்ந்தால்
உங்கள் குழந்தைக்கு பகல் நேர கவனிப்பு தொடங்குவதற்கு முன், நீங்கள் மற்றோர் நகராட்சிக்குக் குடிபெயர்ந்தால், புது நகராட்சியுடன் தொடர்பு கொண்டு குழந்தை பெயரை காத்திருப்போர் பட்டியலில் இடம் வேண்டும். உங்கள் குழந்தை பெயர் முன்னரே ஓர் காத்திருப்போர் பட்டியலில் இடப் பட்டிருந்தது என்பதை புது நகராட்சியிடம் சொல்ல மறவாதீர். இல்லாவிடில் மீண்டும் உங்கள் பெயர் பட்டியல் அடியிலிருந்து துவங்கும்.
உங்கள் குழந்தைக்கு பகல் நேர கவனிப்பு தொடங்கிய பின், நீங்கள் மற்றோர் நகராட்சிக்குக் குடிபெயர்ந்தாலும், புது நகராட்சியுடன் தொடர்பு கொண்டு குழந்தை பெயரை காத்திருப்போர் பட்டியலில் இட வேண்டும். குடிபெயர்ந்த பிறகும் பழைய நகராட்சியின் பகல் நேர கவனிப்பு நிலையம் ஆறு மாதம் வரை உங்கள் குழந்தை அங்கு வருவதற்கு அனேகமாக அனுமதிக்கலாம்.
தொலை பேசியில் கழகத்துடன் சந்திக்கும் நேரத்தை நிச்சயித்துக் கொள்ளுங்கள்
உங்கள் குழந்தை எந்த பகல் நேர கவனிப்பு நிலையத்துக்குச் செல்லலாம் என்று தீர்மானிப்பதற்கு முன், நீங்கள் பல பகல் நேர கவனிப்பு கழகங்களை சென்று பார்க்க முடியும். முன்னதாகவே கழகத்துடன் வருகை நேரம் நிச்சயித்துக் கொள்ளுங்கள். அதனால் பணிபுரிவோர் உங்களுடன் பேச நேரம் ஒதுக்குவதுடன், வசதிகளை அழைத்துச் சென்று காட்டுவதும் உறுதிப்படும்.
கட்டணங்கள்
பகல் நேர கவனிப்பு கழகத்தில் கட்டணம் உண்டு. பொது அதிகாரங்கள் செலவின் ஒரு பகுதியை ஏற்பதால், நீங்கள் முழுக் கட்டணத்தைக் கொடுப்பதில்லை. உங்களது ஒரு குழந்தைக்கு மேலாக கவனிப்புக் கழகத்தில் இருந்தால், சகோதர சலுகைக்கு, உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் முழு அல்லது பகுதி இலவச இடத்திற்கு நகராட்சியிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்துடன் தொடர்பு கொள்க.
குழந்தைக்கு பகல் நேர கவனிப்பு இடத்தை ஏற்றுக் கொள்வது கடமை
பணத்தொகை, வேலை இல்லாமை உதவி, அறிமுக உதவி இவற்றில் எதையும் பெறும் ஒருவர் தொழில் மார்க்கெட்டுக்குத் தயாராக இருக்க வேண்டும். இதன் பொருள் எப்போது கிடைத்தாலும் நீங்கள் வேலையையோ செயல் துவக்கும் திட்டத்தையோ* ஏற்பது உங்கள் கடமை. ஆனால், உங்கள் குழந்தை பகல் நேர கவனிப்புக்குச் சென்றால்தான் நீங்கள் அவ்வாறு செய்ய இயலும்.
பகல் நேர கவனிப்புக்கு உங்கள் தேவைக்கான முடிவு கிடைத்திராவிட்டாலும், நகராட்சி அனேகமாக ஏதாவது ஓர் பகல் நேர கவனிப்பு கழகத்தையோ கவனிப்பாளர் இடத்தையோ அளிக்கும். கிடைக்கும் பொருளுதவியை இழக்க விரும்பாவிடில், அதை நீங்கள் ஏற்றாக வேண்டும்.
தனியார் குழந்தை கவனிப்புச் செலவுக்கு நகராட்சி நிதியுதவி
சில நகராட்சிகள் தாங்களே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெற்றோர்க்கு, தனி பண உதவி தருகின்றன. குழந்தை கவனிப்புப் பெண் அமர்த்துவதன் செலவின் பகுதிக்கு நகராட்சி நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது மற்றொரு வழி. ஆயினும், எல்லா நகராட்சிகளும் இவ்வகை உதவிகள் செய்வதை ஏற்பதில்லை.
பகல் நேர கவனிப்பு கழகத்தில் அன்றாட வாழ்க்கை
வழக்கமாக, பகல் நேர கவனிப்பு கழகங்களில் அறைகள் வயது வாரியாக குழந்தைகளைக் கொண்டிருக்கும். வயதைப் பொறுத்தும் விசேட தேவையைப் பொறுத்தும் குழந்தைகளை சிறு பிரிவுகளாக்க பணியாளர்களுக்கு இது வகை செய்கிறது.
ஒவ்வொரு அறையிலும் தகுதியுள்ள பணியாளர் இருப்பார். இவரே பிரிவின் செயல் முறைகளைத் திட்டமிடுகிறார்.
குழந்தையை கவனித்துக் கொள்வது மட்டுமல்ல நகராட்சியின் பகல் நேர கவனிப்பு வெறும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல. அதன் பணியாளர்கள் தேர்ந்த, பயிற்சி பெற்ற கற்பிக்கும் தொழில் புரிவோர். குழந்தையின் மொழி, உடல், மன முன்னேற்றங்களுக்கு, பாட்டு, பேச்சு, விளையாட்டு, இயற்கை இடங்களில் உலாவுதல், அருங்காட்சியகங்களுக்குச் செல்லுதல், நடித்தல் போன்றவற்றின் மூலம் அவர்கள் வழி செய்கிறார்கள். பிற குழந்தைகளுடன் கூட்டாக இருப்பது சமூகப் பொறுப்பு கொள்வதற்கும் பிறர் நலன் கருதுவதற்கும் கற்றுத் தருகிறது. பிற குழந்தைகளுடன் விளையாடுவதாலும், ஆசிரியர்களின் தொடர்பினாலும் குழந்தைக்கு டேனிஷ் மொழி, சமூகம் இவை பழக்கமாகின்றன. இவ்வாறு பகல் நேர கவனிப்பு கழகங்கள், குழந்தைகளுக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதால், அவர்கள் பள்ளி செல்லத் துவங்குகையில் அது நன்மை பயக்கிறது. குழந்தையைவிட, அழைத்து வரச் செல்கையில் இவர்களைத்தான் வழக்கமாக நீங்கள் சந்திப்பீர்கள். பணியாளர்களிடம் குழந்தையைப் பற்றிச் சொல்லுங்கள்
பகல் நேர கவனிப்பு கழகத்திற்கு உங்கள் குழந்தை செல்லத் துவங்குகையில், நீங்கள் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்படுவீர்கள். அங்கு கழகத்தின் விதிகள், தினசரி வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்வார்கள். இந்தச் சந்திப்பில் உங்கள் குழந்தை பற்றிச் சொல்லவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் அறிய வேண்டிய விஷயம் ஏதாவது உள்ளதா? உதாரணமாக, குறிப்பிட்ட உணவுப் பழக்கங்கள் அல்லது சில செயல்களில் உள்ள பிரச்சினைகள். குழந்தையின் தேவைகளுக்கு ஆவன செய்வதிலும் உதவுவதிலும், எவ்வளவு நன்றாக பணியாளர்கள் குழந்தையை அறிகின்றனரோ, அவ்வளவு நல்ல முறையில் அவர்கள் செயல்பட முடியும்.
பகல் நேர கவனிப்பு கழகங்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை
பெற்றோரான உங்களுக்கும் பகல் நேர கவனிப்பு கழகத்திற்கும் இடையிலான விவரம் பகிரும் பேச்சு வார்த்தை உங்கள் குழந்தை நலனுக்கு மிக அவசியமானது. பல பகல் நேர கவனிப்பு கழகங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் மேற்கொள்ளப் போகும் திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றி அறியலாம்.
குழந்தையை விடும்/அழைத்து வரும் சமயங்களிலும் நீங்கள் குழந்தைக்குப் பொறுப்பான பணியாளரிடம் பேசும் வாய்ப்பு உண்டு. அன்றைய தினம் எவ்வாறு கழிந்தது என்பது பற்றியும் குழந்தையை பாதிக்கக் கூடிய குடும்ப மாறுதல்கள் இருந்தால் அவை பற்றியும் பேசலாம்.
அதிகம் பேசத் தேவை இருப்பின், பணியாளருடன் பெற்றோர் நேர் காணலுக்கு நேரம் முன்கூட்டி நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.
பல பகல் நேர கவனிப்பு கழகங்களில், நேர் காணலுக்கு உதவ, இரு மொழி பேசும் பணியாளர்கள் உண்டு. உங்கள் மொழி தெரிந்த இருமொழி பேசும் பணியாளர் இல்லையானால், வெளியிலிருந்து ஒரு பேச்சு மொழி பெயர்ப்பாளர் அங்கு இருக்க ஏற்பாடு செய்யப்படும்.
பெற்றோர்கள் கூட்டம்
ஆண்டுக்கு இருமுறை எல்லாப் பெற்றோர்களும் சேர்ந்த கூட்டத்தை பகல் நேர கவனிப்பு கழகங்கள் நடத்துகின்றன. ஆண்டுக்கான திட்டங்களை பணியாளர்கள் இக்கூட்டங்களில் விளக்குவதுடன் விவரங்கள் குறித்து விவாதத்துக்கும் அழைக்கின்றன. கழகத்தின் நடைமுறை பற்றிய முக்கிய விவரங்கள் பெறும் வாய்ப்பு என்பதால், கூட்டத்திற்கு வருவது பெற்றோர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. விவாதத்துக்குத் தலைப்புகள், குழந்தைகளுக்கும் பெற்றோர்க்கும் செய்முறைகள் இவை பற்றியும் பெற்றோர் கருத்து தெரிவிக்கலாம். இக்கூட்டம் ஒன்றில் பெற்றோர்கள், பெற்றோர் குழுமத்திற்கு, தங்கள் பிரதிநிதியைத் தேர்வு செய்வார்கள்.
பெற்றோர் குழுமம்
பகல் நேர கவனிப்பு கழகங்கள்தாம் அவற்றின் தினசரி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு. ஆயினும், பெற்றோர் குழுமத்தின் கருத்துக்களும் தேவைகளும் கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு இவற்றில் மாறுதல் விளைவிக்க வாய்ப்பு உண்டு.
இரு பண்பாடுகளுக்கு இடையே சிக்கிய இளம் வயதினர்
பெற்றோர் இளம் மக்கள் இருவருக்குமே விடலைப் பருவம் ஒரு கடினமான கால கட்டம். இளம் மக்கள், உடலும் மனமும் மாறுபாடுகள் அடைவதை உணர்கின்றனர். தங்கள் இருப்பை அவர்கள் எதிர்கொண்டு நிலை பெற வேண்டும். பெற்றோரிடமிருந்து விடுபட்டு தம் சுதந்திரத்தை அடையாளம் காட்ட வேண்டும். அதே சமயம், பெற்றோர் இப்போதும் இளம் மக்களது பொறுப்பை ஏற்று இருப்பதுடன், அவர்களது முன்னேற்றம் சுய சிந்தனை இவற்றின் வரம்புகளை உருவாக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளனர்.
தொடக்கத்திலிருந்த தங்களது பண்பாட்டிலிருந்து டென்மார்க் பண்பாடு மிகவும் வேறுபட்டதாக உணரும் இளம் வயதினருக்கும் பெற்றோருக்கும், இந்தப் பாதைமாற்றுக் காலம் வெகுவே கடினமாக இருக்கக் கூடும். இளம் வயதினர் தாங்கள் வளர்ந்த பண்பாட்டுச் சூழலுக்கும் டென்மார்க் சமூகத்து இளைஞர் வழிமுறைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் பாதிக்கப்படலாம். டென்மார்க் சமூகத்தின் வழக்க முறைகளைப் புரிந்து கொள்வதில் பெற்றோர்க்கும் சிரமம் இருக்கலாம். அதனால் குழந்தைகள் எதிர்காலம் பற்றி அவர்கள் கவலை அடையலாம்.
பிரச்சனைகள் தீராமல் தடைக்கல் நிலை அடைந்தால், உங்களுக்கு திறமையான உதவி தேவை. பெற்றோர்களும் இளம் வயதினரும் – தனித்தும் சேர்ந்தும் – ஆலோசனைகளும் வழிகாட்டலும் பெற இயலும். உங்கள் நகராட்சி அலுவலகத்துடனோ, ஆபத்துக் கால அவசரத் தொடர்பு எண்ணுடனோ, தொலைபேசி ஆலோசனை வசதியுடனோ தொடர்பு கொள்ளுங்கள். இந்தச் சேவைகள் இலவசம் மற்றும் உங்கள் பெயர் தெரிய வரவேண்டிய அவசியமில்லை.
பிரச்சினையுள்ள குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு குழந்தைகளுக்கு அன்பும் ஆதரவும் கொடுப்பது, அவர்கள் வளர ஓர் பாதுகாப்பான சூழ்நிலை தருவது இவை பெற்றோர்களின் பொறுப்பு ஆகும். குழந்தையின் நல்வாழ்வுக்கு ஆபத்து நேரலாம் என்றாலன்றி, சமூகம் அந்த உறவில் குறுக்கிடாது. இந்த நிலை நேர்ந்தால், நகராட்சி குடும்பத்தோடு தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தீர்க்க உதவி புரியும். குடும்பமோ அல்லது அதன் உறுப்பினரோ நகராட்சியின் உதவியைக் கோரவும் இயலும். பிரச்சினை மிகத் தீவிரமானதாக இருந்தால், கொஞ்ச காலத்துக்கு குழந்தை ஓர் நிறுவன அமைப்பின் அல்லது ஒரு குடும்பத்தின் கவனிப்பில் வைக்கப்படலாம். தீவிர சமூகப் பிரச்சினையுள்ள இளம் வயதினருக்கு, பெற்றோர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்ள இயலாமல் போகும் நிலை நேர்ந்தால், அவர்கள் விசேட நிறுவனங்களின் அமைப்புகளில் வைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு கல்வி பெறவும், வேலை தேடவும் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குற்றச் செயல் புரிந்த 15 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கும் இது பொருந்தும். முதியோர்கள்
முன் ஓய்வு உதவி மற்றும் முன் ஓய்வு ஓய்வூதியம்
வழக்கமாக, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகள். ஆனால் சில மக்கள் முன் ஓய்வு உதவி (efterløn) ஏற்று, வேலை மார்க்கெட்டிலிருந்து விலகத் தீர்மானிக்கிறார்கள். சில மக்களுக்கு வேலை செய்ய இயலாதவாறு, எத்தனையோ உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம். அவர்களும் முன் ஓய்வு ஓய்வூதியத்துக்கு (førtidspension) அனுமதிக்கப்படலாம். முன் ஓய்வு உதவி மற்றும் முன் ஓய்வு ஓய்வூதியம் பெற நீங்கள் சில நிபந்தனைகளின் நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு உங்கள் நகராட்சி அதிகாரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தேசிய ஓய்வூதியத் திட்டம்
ஓய்வூதியம் பெறக்கூடியவர் எவருக்கும் அரசு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு. நீங்கள் டென்மார்க்கில் 40 ஆண்டுகள் வசித்திருந்தால், அதாவது 15 முதல் ஓய்வு பெறும் வயது வரை, முழு ஓய்வூதியம் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. டென்மார்க்கில் நீங்கள் அதற்குக் குறைவான காலம் வசித்திருந்தால், பொதுவில் உங்கள் ஓய்வூதியம் குறைவானதாக இருக்கும். நகராண்மை ஓய்வூதிய அலுவலகம் உங்கள் ஓய்வூதியத் தொகையை நிர்ணயிக்கிறது. உங்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் கூறுவார்கள்.
செயல் திறம் உள்ள மூத்த குடிமக்கள்
திட நோக்கமும் திறமும் உள்ள மூத்த குடிமக்களுக்கு, பிடித்த விஷயங்களில் ஈடுபட்டிருக்கவும் செயல் நிறைந்த வாழ்க்கை நடத்தவும், நிறைய வாய்ப்புகள் உள்ளன. இயன்ற அளவுக்குத் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் மேற்கொள்ள, தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்க தகுதி பெறச் செய்வதே டென்மார்க் அரசின் வயது முதிர்தல் குறித்த கொள்கை.
எனவே வயது முதிர்ந்தோர்க்கு, தங்கள் விஷயம் பற்றிய, தங்கள் இடத்து சமூகம் பற்றிய தீர்மானங்களில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு.
வீட்டு உதவி
உதாரணமாக, முதியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சியின் மூத்த குடிமக்கள் ஆலோசனை சபை, நகராட்சிக்கு இத்தகையோருக்கான முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை தரும்.
முதியாருக்குக் குடியிருப்பு வசதி
பல மூத்த குடிமக்கள், எவ்வளவு முடியுமோ அதுவரை, தங்களது வீட்டில் வசிக்கின்றனர். மூத்த குடுமக்களுக்கு உடல் கவனிப்பு, வீட்டுச் சுத்தம், கடை சாமான் வாங்குதல் போன்றவற்றில் உதவி பெறும் உரிமை உண்டு. உங்கள் தேவைகளின் கணிப்பை நகராட்சி செய்வதைப் பொறுத்து, எவ்வளவு உதவி உங்களுக்குக் கிடைக்கும் என்பது அமையும். நீங்கள் விசேடமான தேவைகள் உள்ள அல்லது உடல் பிரச்சினைகள் உள்ள மூத்த குடிமகனாக இருந்தால், நகராட்சி அதிகாரத்திடம் முதிய மக்கள் இருப்பிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இக் குடியிருப்புகள் முதிய மற்றும் ஊனமுற்ற மக்களுக்கென விசேடமாக அமைக்கப்பட்டவை. நிறைய சமயங்களில், ஆபத்து சமய உதவி எளிதில் பெற உதவுமாறு, இவ்வகை இட வசதிகள் சிகிச்சை மையத்துடன் இணைந்த முறையில் இருக்கும். மூத்த மக்கள் இருப்பிடத்தில் இடம் கிடைக்க, நீங்கள் காத்திருக்க வேண்டி வரலாம். எனவே வெகு முன்னதாகவே உங்கள் பெயரை காத்திருப்போர் பட்டியலில் போட்டு வைப்பது நல்லது.
தங்கும் வசதி இருப்பிடங்கள் அல்லது சிகிச்சை மனைகள்
நிறைய கவனிக்கப்பட வேண்டிய மூத்த மக்களுக்கு, தங்கும் வசதி இருப்பிடங்களோ அல்லது சிகிச்சை மனைகளிலோ வசிக்க உரிமை உண்டு. இம்மையங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமைத்தல், கழுவுதல், சுத்தப் படுத்துதல், வசிப்பவரது சொந்த சுகாதாரத்துக்கு உதவுவது போன்ற நடைமுறை வேலைகளையும் செய்வார்கள்.
கிடைக்கும் சேவைகளுக்கு மூத்த குடிமக்கள் பணம் தருவார்கள். ஆயினும், ஓய்வூதியம் பெறுபவராக நீங்கள் இருந்தால்கூட, பொதுவில் இக்கட்டணங்கள் கட்டுபடி ஆகக்கூடியவை.
வாழ்க்கை முடிகையில்
மரணச் சான்றிதழ்
ஒருவர் இறக்கையில், ஒரு மருத்துவரின் மரணச் சான்றிதழ் பெற்றாக வேண்டும். வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், கூடிய விரைவில் இறந்தவரின் ஒரு உறவினர் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினரிடம் மரணச் சான்றிதழ் தரப்படும். அதனுடன் தரப்படும் மரண அறிவிப்புதனை இறந்தவர் வசித்த இடத்து தேவாலய அலுவலகத்திடம் கொடுக்க வேண்டும். இறந்தவருக்கு அவரது உறவினர்களுக்கு எந்த மதச் சார்பு இருப்பினும், எல்லா மரணங்களும் டென்மார்க் அரசின் சார்பாக, டென்மார்க் தேசிய திருச்சபைதனில்* பதிவு செய்யப்படும்.
ஒருவர் இறக்கையில், மரணம் பற்றி அறிவிப்பு உடைமைகளுக்கான நீதிமன்றத்திடம் (Skifterret)* தானாகவே ஆகிவிடும். விரைவில், நெருங்கிய உறவினர்களை, இறந்தவரது நிலம் – வீடு, அதாவது சொத்துக்களின் பங்கீடு விஷயமாக, விவாதிக்கும் கூட்டம் ஒன்றுக்கு நீதிமன்றம் அழைக்கும்.
இறுதிச் சடங்குகள்
வழக்கத்தில், இறந்தவர் உடல் எட்டு நாள்களுக்குள் புதைக்கப்படவோ எரிக்கப்படவோ வேண்டும். இறுதிச் சடங்கு வேலைகள் செய்விப்பவர் (Bedemand) எல்லா நடைமுறை விஷயங்களிலும் உங்களுக்கு உதவி செய்வார். நகராட்சி அதிகாரத்திடமிருந்து உங்களுக்கு நிதியுதவி (இறுதிச் சடங்குக்கு உதவி) கிடைக்கலாம். இறந்தவர் மற்றொரு நாட்டில் புதைக்கப்பட வேண்டுமானால், நகராட்சி மன்றம் பிணம் வெளிச் செல்ல அனுமதி கொடுத்தாக வேண்டும். அது பயணத்தில் பிணத்துடன் இருக்க வேண்டிய விசேட ஆவணம் ஆகும்.
2,100 இடுகாடுகள்
சுமார் 2,100 இடுகாடுகள் டென்மார்க் தேசிய திருச்சபைக்கு* உடைமையானவை, அதனால் பராமரிக்கப்பட்டவை. எந்த டென்மார்க் குடிமகனும் அவர் வாழும் இடத்தின் தேவாலயம் சார்ந்த இடுகாட்டில் புதைக்கப்பட உரிமை உண்டு. டென்மார்க் தேசிய திருச்சபை அல்லாத பிற மதச் சமூகங்களின் உறுப்பினர்கள் தங்களது புதைக்கும் சடங்குகள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்த முடியாது. ஆனாலும் அவர்கள் தங்கள் விருப்பங்களை இடுகாடுகள் குழுமத்திடம் தெரிவிக்கலாம்.
பிற மதச் சமூகத்தின் உறுப்பினர்களுக்கான அடக்கம் செய்யும் இடங்கள்
டென்மார்க் தேசிய தேவாலயம் அல்லாத பிறமத சமூக உறுப்பினர்களுக்கு, இடுகாடுகளுக்கான தனி இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது தவிரவும், பிற மதச் சமூகத்தினர் தங்களது அடக்க மயானங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அனுமதி டென்மார்க் மத விவகார அமைச்சகத்திடமிருந்து பெறலாம். ஆனால் மதச் சமூகமே இடம் தேடுதல் மற்றும் விலை கொடுத்து வாங்குதல், அடக்க மயானத்தை ஏற்படுத்துதல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அடக்க மயானம் ஏற்படுத்த அனுமதி
திட்டத்திற்கு பொது சுகாதார அதிகாரிகளின் ஆமோதிப்பும், அமையும் பகுதியின் இடத்திட்ட வரைவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இந்த அனுமதிக்கு நிபந்தனைகள். அடக்க மயானத்தின் உபயோக முறை கண்காணிப்பு பற்றிய விதிகளும் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இடுகாட்டில் எவர் புதைக்கப்படலாம் என்பதை நிர்ணயிக்க ஒரு மதச் சமூகத்துக்கு உரிமை உண்டு.