முதல் பக்கத்திற்கு


6. குடியிருப்பு



உயர்ந்த குடியிருப்புத் தரம்Audio

1950-களிலிருந்து, குடியிருப்புத் தரம் டென்மார்க்கில் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதிகரித்து வரும் வருவாயின் காரணமாக, பெரிய இருப்பிடங்கள் கட்டப்பட்டன. தவிரவும், குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், குறிப்பாக 1960-கள் முதலாக, குடுமக்களில் அதிகம் பேர் தனியாக வசிக்கின்றனர் அல்லது இருவர் மட்டுமே ஒரு வீட்டிலோ, ஃபிளாட்டிலோ வசிக்கின்றனர். 1955-இல் ஏற்க்குறைய 50% மக்கள் ஒரு நபருக்கு ஒரு அறை என்ற அளவுக்குக் குறைவான இருப்பிடங்களில் வசித்தனர். 45 ஆண்டுகளுக்குப் பின், அநேக இருப்பிடங்களில் ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு அறை இருந்தது.

1970-இல் மூன்றில் ஒரு பங்கு இருப்பிடங்களில், தனியான குளியலறை கழிப்பறை வசதியோ, மையமான சூடாக்கும் வசதியோ இருக்கவில்லை. 2000-இல் இதனளவு, அதிலும் பெரும்பாலும் தனிக் குளியலறை இல்லை என்பதில், 7% ஆகக் குறைந்தது. அநேகமாக எல்லா இருப்பிடங்களும் மையமான சூடாக்கும் வசதி அல்லது இடத்துக்கிடம் சூடாக்கும் வசதி கொண்டவை. இதன் பொருள் ஒரு மையமான சூடாக்கும் நிலையத்தில் எண்ணெயை அல்லது இயற்கை எரிவாயுவை எரித்து, வெப்ப வசதி தரப்படுகிறது என்பது. இப்போதும் சில இருப்பிடங்கள் எண்ணெய் அல்லது பாரஃபின் அடுப்புகளால் சூடாக்கப்படுகின்றன.

1960-களில் குறிப்பாக, பல டென்மார்க் மக்கள் ஒரு குடும்ப வீடுகளுக்குப் பெயர்ந்தனர். 2000-இல், 1955-இல் இருந்ததற்கு இரு மடங்கு என, மக்கள் ஒரு குடும்ப வீடுகளில் வசித்தனர். அதே சமயம், பல அடுக்குக் கட்டிடத் தொகுதிகளில் வாழும் மக்களின் சதவிகிதம், 50% லிருந்து 30% க்கு இறங்கியது.உடைமையாளர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. அதற்குக் காரணம், பெரும்பாலான ஒரு-குடும்ப வீடுகள் உடைமையாளர்கள் வசிக்கும் இடம் ஆயின என்பது தவிர, முன்னர் வாடகைக்கென இருந்த பல அடுக்குக் கட்டிடங்களின் இல்லங்களும் கூட உடைமையாளர் வசிக்கும் ஃபிளாட் ஆக மாறிவிட்டன என்பதும் ஆகும். இருந்த போதிலும், புதிதாக எழும் பல அடுக்குக் கட்டிடங்கள் வாடகை இருப்பிடங்கள்.

வாடகை இருப்பிடங்களின் விலைக்கும், உடைமையாளர் வசிக்கும் இருப்பிடங்களின் விலைக்கும் வேறுபாடு மிக அதிகம். அது இருப்பிடம் எங்கு உள்ளது, எவ்வளவு பழையது, எவ்வளவு பெரியது, பராமரிப்பு நிலை என்ன என்பவற்றைப் பொருத்தது.

குயிருக்கும் இடம் தேடிப் பெறுவதுAudio

கூட்டுறவு, வாடகை அல்லது உடைமையாளர் வசிக்கும் இருப்பிடம்

அநேகமான வாடகை இருப்பிடங்கள் பல அடுக்குக் கட்டிடங்களில் உள்ளன. வழக்கமாக இவை, பெரிய நகரங்களின் இருப்பிடப் பகுதிகளின் பெரும் குடியிருப்பு எஸ்டேட்களாக இருக்கின்றன. இளம் வயதினர் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் உட்பட, பல ஃபிளாட்களை நகராட்சிகள் நிர்வகிக்கின்றன. இந்த ஃபிளாட்களை அவை வாடகைக்குத் தரலாம். இவ்வகை இருப்பிடம் பெறும் தகுதிக்கு, நீங்கள் சில தேவைகளின் பூர்த்தியைச் செய்திருக்க வேண்டும். இவ்வாய்ப்புகள் குறித்து உங்களது நகராட்சியிடம் விசாரியுங்கள்.

தனியார் குடியிருப்புச் சங்கங்களும் ஃபிளாட்களை வாடகைக்குத் தருகின்றன. ஒரு சில தனியார் வீட்டு உடைமையாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளை வாடகைக்கு விடுகின்றனர். ஒரு-குடும்ப வீடுகள் வாடகைக்குத் தரப்படுவது அரிது.

அநேகமான ஒரு-குடும்ப வீடுகள் உடைமையாளர் வசிக்கும் இருப்பிடங்கள். இவை தனியார் குடியிருப்பு மார்க்கெட்டில் விற்கப்படுவன. தனியார் மார்க்கெட்டில் ஒரு பகுதி ஃபிளாட், தொடர்ச்சியான – ஒரேவிதமான வீடுகள் இவற்றைக் கொண்டது. இவற்றுள் சில, கூட்டுறவுச் சங்கங்களின் உடைமை ஆனவை. இதன் பொருள், அச்சங்கங்களின் பங்குகள் வாங்குவதன் மூலம், அவற்றின் வீடுகள் அல்லது ஃபிளாட்களில் வசிக்க உரிமை பெறுகிறீர்கள் என்பது.


 

விளம்பரங்களைப் பாருங்கள் அல்லது பிறரைக் கேட்டு அறியுங்கள்

வசிப்பதற்கு வீடு தேடுவீர்களானால், கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உள்ளன:

  • நகராட்சி குடியிருப்பு அலுவலகத்தில் கேளுங்கள்
  • குடியிருப்புச் சங்கத்தில் ஃபிளாட்டுக்கென காத்திருப்போர் பட்டியலில் உங்கள் பெயரைக் கொடுங்கள்
  • தேசிய அல்லது உள்ளூர் செய்தி ஏடுகளின்* விளம்பரங்களைப் பாருங்கள், அல்லது நீங்களே ஒரு விளம்பரம் போடுங்கள்
  • இணையத்தில் தேடுங்கள், அல்லது அதனுள் கட்டணமற்ற விளம்பரம் கொடுங்கள். பொதுஜன நூலகத்தில் இணையத்திற்கு வசதி இருக்கக்கூடும்.
  • டென்மார்க் தொலைபேசி எண் புத்தகத்தின் விளம்பரப் பக்கங்களில்* ''குடியிருப்பு தரகமைப்புகள் '' (Boliganvisning) என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்
  • உங்கள் இடத்தின் அருகிலுள்ள பல்பொருள் அங்காடியின் விளம்பரப் பலகையில் விளம்பரம் கொடுங்கள்
  • உறவினர்கள், நண்பர்கள், பரிச்சயம் ஆனவர்களிடம் கேளுங்கள்.

 

மக்களில் பலர் தங்கள் வீட்டு உடைமையாளர்கள் டென்மார்க்கில், 63% மக்கள் ஒரு-குடும்ப வீடுகளில் வசிக்கின்றனர்அவர்களில் பலர் குழந்தைகளை உடைய கணவன்-மனைவியர். அதில் பலர் தங்கள் வீடுகளின் உடைமையாளர்கள். அனேகமான ஒரு குடும்ப வீடுகள் மனைக்கு ஒன்று என்ற முறையில் தனித்தனியானவை. பிற, தொடர்ச்சியான – ஒரேவிதமான வீடுகள். 30% மக்கள் ஃபிளாட் தொகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இல்லாத தனிமனிதர்களுக்கு இது பொருந்தும். இதில் பெரும்பாலோர் வாடகைக்கு வசிப்பவர். சிலர் கூட்டுக் குடியிருப்பு முறையில் வசிக்கின்றனர். இதில் தனிநபருக்குத் தனி அறை(கள்) உண்டு எனினும் செலவுகளும், சமையலும், வீட்டு வேலைகள் பலவும் பகிர்ந்து கொள்ளப்படுபவை. இளைய மக்களில் பலர், கூட்டாக ஒரு ஃபிளாட்டிலோ அல்லது தனியார் வீட்டுடைமையாளர் வாடகைக்கு விடும் அறையிலோ வசிக்கின்றனர். மாணவர்கள் மாணவர் - விடுதிகளில் அறை வாடகைக்கு எடுக்கலாம். ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற முறையில் அமைத்த மாணவர் விடுதிகளில், பல மாணவர்கள் தங்க இடமுண்டு. வழக்கமாக, அறைகள் தனித் தனியானவை. கழிப்பிட மற்றும் குளிக்கும் வசதி கொண்டவை. ஆனால் சமையல் அறை, புழங்கும் அறை இவை கூட்டு உபயோகத்துக்கு ஆனவை.

வாடகை வசிப்பிடங்கள்Audio

இலாப இலக்கற்ற அல்லது தனியார் வீட்டுவசதி சங்கம்

வாடகைக்கு விடப்படும் வசிப்பிடங்கள், தனியார் அல்லது இலாப இலக்கற்ற வீட்டுவசதி சங்கங்களுக்குச்* சொந்தமானவை. ஃபிளாட்டுக்கென, உங்கள் பெயரைக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறத் தரலாம். இதன் பொருள் உங்கள் பெயர் முதலிடத்துக்கு வருகையில் வீடு கிடைக்கும் என்பது. ஆனால் பல வருடங்கள் காத்திருக்க நேரலாம். குடியிருப்புச் சங்கத்தில் காத்திருக்கும் கால வரை பற்றி விசாரியுங்கள்.

தனியார் வீட்டுவசதி சங்கங்களில் காத்திருப்போர் பட்டியல் காண்பதரிது. பிளாட் காலியாகும்போது உடைமையாளர் புதிய வாடகையாளரைத் தேர்ந்தெடுக்கிறார்.

வாடகை ஒப்பந்தம்

உரிமைகளும் கடமைகளும்

வாடகையாளருக்கும் வீட்டு உடைமையாளர்களுக்கும் உரிமைகளும் கடமைகளும் உள்ளன. இவை டென்மார்க் வாடகைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. வாடகை ஒப்பந்த முடிவடைவு குறித்த வரையறுப்புகள் இச்சட்டத்தில் உள்ளன. ஒரு வாடகையாளராக, பொதுவில் மூன்று மாத முன் அறிவிப்புச் செய்து, உங்கள் வாடகை ஒப்பந்தத்தை முடிவுறச் செய்யலாம். மேலும், உங்கள் கடமைகளில் நீங்கள் தவறாது இருந்து வந்தால், உடைமையாளர் திடீரென உங்களை வெளியேற்ற முடியாது.

எவ்வளவு அதிக வாடகை இருக்கலாம், வாடகை இடத்தின் பராமரிப்பு எவர் பொறுப்பு, அவ்விடம் எத்தனை நபர் வசிக்கலாம் என்பவை பற்றியும் டென்மார்க் வாடகைச் சட்டம் விதிகளை ஏற்படுத்தி உள்ளது.

வாடகை ஒப்பந்தம் உங்களது உரிமை

டென்மார்க் வாடகைச் சட்டத்தின்படி உங்களுக்கும் உடைமையாளருக்கும் இடையேயான ஒப்புதல்களைக் கொண்டிருக்கும் வாடகை ஒப்பந்தம் உங்களுக்குத் தரப்பட வேண்டும். உதாரணமாக, ஒப்பந்தத்தின் முடிவுக்கு நீங்கள் எவ்வளவு முன்னதாக அறிவிப்புத் தர வேண்டும் என்பதை ஒப்பந்தம் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஃபிளாட்டிலிருந்து பெயர்ந்து செல்கையில் வீட்டின் பராமரிப்பு நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தம் குறிப்பிட வேண்டும்.

ஃபிளாட்டை சோதித்தறியுங்கள்

வாடகை ஒப்பந்தத்தை – சிறிய எழுத்துக்களில் உள்ளவை உட்பட – படிக்காமல் கையொப்பம் இடாதீர்கள். உடைமையாளர் பிரதிநிதியுடன் சேர்ந்து ஃபிளாட்டைப் பரிசீலனை செய்யாமலும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாதீர்கள்.

வாடகை ஒப்பந்தத்திலேயோ அல்லது இருவரும் சேர்ந்து கையெழுத்து இடும் ஒரு காகிதத்திலோ, பிளாட்டின் குறைபாடுகளின் (அவ்வாறு இருப்பின்) பட்டியல் அமையுங்கள். குடி பெயர்ந்த இரண்டு வாரத்துக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டு பிடித்தாலும் கவனிப்பாளரிடம் அவற்றை அறிவியுங்கள். இவ்விதம், நீங்கள் ஏற்படுத்தாத குறைபாடுகளுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டி வராது.

வாடகை ஒப்பந்த வைப்பு அல்லது ஒப்பந்த முன் கட்டணம்

வைப்புத் தொகையை உடைமையாளருடன் முன் கூட்டியே ஒப்புக் கொள்வது அவசியம்

முதல் வாடகை கொடுக்கும் முன்னர் அல்லது வாடகையுடன், ஒரு ஒப்பந்த வைப்பு அல்லது முன்கட்டணத்தை கொடுக்க வேண்டி வரும். இந்த ஒப்பந்த வைப்பு அல்லது முன்கட்டண அளவை, நீங்களும் உடைமையாளரும் முன்கூட்டியே ஒப்புக் கொள்வது அவசியம்.

உங்களால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதைச் சரி செய்ய, உடைமையாளர் அந்த முன்கட்டணத் தொகையைப் பயன்படுத்தலாம். குடுபுகும்போது இருந்த பராமரிப்பு நிலையிலேயே, குடிபெயர்கையில் வீட்டை திருப்பி அளித்தால், அச்சமயம் உங்கள் முன் கட்டணத் தொகையைத் திரும்பிப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

கணவன் மனைவி இருவரும் வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள்

ஃபிளாட்டில் சேர்ந்து வசிக்கப் போகும் திருமணமான சோடிகளாக நீங்கள் இருந்தால், இருவரும் சேர்ந்தே வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பம் இடலாம். அவ்வாறு செய்தால், ஒருகால் ஒருவல் விலகிச் சென்றாலோ அல்லது விவாக ரத்து ஆனாலோ, மற்றவர் ஃபிளாட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமை இருக்கும்.

வசிப்பவர்கள் எத்தனை பேர்?

அறைக்கு எத்தனை ஆள் என்ற வரையரை இருக்கலாம்

சில வாடகை ஒப்பந்தங்களில், பிளாட்டில் அதிகபட்சம் எத்தனை பேர் இருக்கலாம் என்று உடைமையாளர்கள் வரையரை செய்திருக்கிறார்கள். நகராட்சிகள் ஓர் அறைக்கு அதிகபட்சம் இருவர் என்று விதி செய்யலாம். இவ்விதிகள், கட்டுப்பாடுகள் பற்றி மேலும் விவரங்கள் அறிய நகராட்சியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

வாடகை இருப்பிட உதவித் தொகை

நகராட்சி அதிகாரத்திடம் கடன் மற்றும் உதவிக்கு விண்ணப்பம் செய்யுங்கள்

வாடகை இருப்பிடத்திற்கான வைப்புப் பணம் கட்ட, நகராட்சியிடம் கடனுக்கு நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். உங்களது நிதி நிலை, சமூக நிலை இவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் நகராட்சி உங்களுக்குக் கடன் தருவதைத் தீர்மானிக்கும். கடன் பெற்றால், பின் அடைத்தாக வேண்டும்.

நீங்கள் கட்டும் வாடகைத் தொகை – அதாவது அதன் ஒரு பகுதியின் – நிதியுதவிக்கும், நகராட்சி அதிகாரத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். கீழ்க் கண்டவற்றின் அடிப்படையில் நகராட்சி அதிகாரம் உதவி அளவினை நிர்ணயம் செய்யும்:

  • ஃபிளாட்டில் வசிப்பவர் எத்தனை நபர்
  • ஃபிளாட்டின் அளவு
  • வாடகைத் தொகை
  • மொத்த குடும்ப வருவாய்

ஓய்வூதியம் பெறுவோர் சிறப்பு வாடகை உதவிக்கு (தொடர்ச்சித் தொகைக்கு) விண்ணப்பிக்கலாம்.

புகார் வழிமுறைகள்

நகராட்சியின் நிர்ணயத்தை ஏற்க இயலாவிடின், நீங்கள் புகார் கொடுக்கலாம். நகராட்சியிடமிருந்து தீர்மானம் தெரிவித்து வந்த கடிதத்தில், எவ்விடம் எத்தனை நாட்களுக்குள் புகார் செய்ய வேண்டும் என்ற விவரங்கள் பெறலாம்.

உள்வாடகைக்கு விடுதல்

உள்வாடகைக்கு விடுதல்

ஒரு வாடகையாளரிடமிருந்தோ அல்லது ஒரு கூட்டுறவு குடியிருப்புச் சங்கத்தின் உறுப்பினரிடமிருந்தோ நீங்கள் பிளாட் வாடகைக்குப் பெறலாம். உள்வாடகைக்கு விடுதல் என்ற பெயர் கொண்ட இதன் கால வரை இரண்டு வருடங்கள். உடைமையாளர் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அதிகக் கால வரை அனுமதிக்கப்படும்.

பரிமாற்றம் செய்து கொள்ளல்

ஃபிளாட்களை பரிமாற்றம் செய்து கொள்ளல்

சில வாடகை வீட்டு உடைமையாளர்களும் கூட்டுறவு சங்கங்களும் ஃபிளாட்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொள்வதை அனுமதிக்கலாம். இதன்படி உங்களுக்கு ஒரு ஃபிளாட் இருந்தால், இன்னும் பெரய அல்லது சிறிய அல்லது சுற்றுப் புறத்திலுள்ள வேறொரு ஃபிளாட்டுடன் ஒருவருக்கு ஒருவர் மாற்றம் செய்து கொள்ளலாம். உங்கள் கட்டிட மேலாண்மை அலுவலகத்தில்* பரஸ்பர மாறுதலுக்கு அனுமதி உங்களுக்கு உண்டா என்பதைக் கேளுங்கள்.

சச்சரவு மற்றும் புகார்கள்

உங்கள் வீட்டுடைமையாளருடன் உங்களுக்கு மன ஒவ்வாமை ஏற்பட்டால், உதாரணத்துக்கு பராமரிப்பு, ஒருவருக்கு ஒருவர் வீடு மாற்றல், உள் வாடகைக்கு விடுதல் இவைபற்றி, நீங்கள் புகார் செய்யலாம். இலாப இலக்கற்ற வீட்டுவசதி சங்கத்தின்* வாடகை இருப்பிடத்தில் நீங்கள் வசித்தால், சிறப்பு வாடகையாளர் புகார் குழுமத்தில் புகார் செய்யலாம். வாடகையாளர் சங்கம்* அல்லது நகராட்சியிடம், குழுமத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதைக் கேளுங்கள்.

நீங்கள் தனியார் வாடகைக் குடியிருப்பில் வசித்தால், வாடகைக் கட்டுப்பாடு குழுமத்திடம்* புகார் கொடுக்கலாம். உங்கள் அருகாமையில் வாழும் ஒருவருடன் சச்சரவு நேர்ந்தாலும், உதாரணத்துக்கு இரைச்சல் குறித்து, இதுவே வழிமுறை ஆகும்.

வழிகாட்டல்

குடியிருப்பு குறித்த ஆலோசனை

பெரிய இலாப இலக்கற்ற வீட்டுவசதி சங்கங்களில்* ஆலோசனை தர, வழிகாட்ட குடியிருப்பு ஆலோசகர் இருப்பதுண்டு. இருப்பிடம் சம்பந்தமாக உங்களுக்குக் கிடைத்த கடிதங்களைப் புரிந்து கொள்ளவும் உதவி கிடைக்கலாம்.

  

சேர்ந்துகொள்ளுங்கள் உங்கள் குடியிருப்புப் பகுதியில் அக்கம்பக்கத்தோர் நல்லுறவுக்கு நீங்கள் பங்களிக்க இயலும். வாடகையாளர் ஆலோசனை சபை, கூட்டுறவு குடியிருப்பு அல்லது வீட்டு உடைமையாளர் சங்கங்களின்* குழுமங்கள், பிற பிரதிநிதித்துவ குழுக்கள் இவற்றின் பிரதிநிதி தேர்தல்களில் நீங்கள் பங்கு கொள்ளலாம். வசிப்போர் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள், செயல் வழிகள் இவற்றிலும் இடம் பெறலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான செயல் திட்டங்களிலும் நீங்கள் பிரதிநிதியாகவோ ஆலோசனை தந்தோ தீவிரப் பங்கு கொள்ளலாம். இம்முறையில், சுற்றுப்புறத்தில் நல்ல மாறுபாடு விளைவிக்கவும், அக்கம்பக்கத்தோரை தெரிந்துகொள்ளவும் உங்களால் இயலும். நீங்கள் குடியேறும்போது, வசிப்போர் கூட்டம் எங்கு நடக்கும், வாடகையாளர் சங்கம்* உள்ளதா என்பதை பற்றி விசாரியுங்கள்.

வாடகையாளர் ஜனநாயகம்

இலாப இலக்கற்ற குடியிருப்புகளில் வாடகையாளர் ஜனநாயகம்

இலாப இலக்கற்ற வீட்டுவசதி சங்கங்களில்* நன்கு முன்னேறிய ஜனநாயக வழிச் சயல்பாடு உண்டு. இதன் பொருள் வாடகையாளர் ஆலோசனை சபை அல்லது குழுமத்தில், வாடகையாளர்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். பிரதிநிதிகளின் சொல்லுக்கு மதிப்புண்டு, உதாரணமாக, பொது இடங்களை எவ்விதம் நிர்வகிக்க வேண்டும் போன்றவற்றில், வாடகையாளர் பிரதிநிதியும் வீட்டு விதிகளைக் கொண்டு வரலாம். சமுதாய செயல் திட்டங்களுக்கு வழி வகுக்கலாம்.

தனியார் வாடகைக் குடியிருப்பில் வாடகையாளர் செல்வாக்கு

தனியார் உடைமை குடியிருப்புகளிலும், (சொந்தக்காரர்களுக்கு எதிராக) தங்கள் நன்மை பாதுகாக்க பிரதிநிதி நியமிக்கும் உரிமை, வாடகையாளருக்குப் பெருமளவில் உண்டு, உடைமையின் நிதி நிலவர வாக்குமூலங்களைப் பார்வையிடும் உரிமை வாடகையாளர் பிரதிநிதிக்கு உண்டு. மேலும் பிரதிநிதியிடம் கேட்ட பின்னரே, உதாரணத்துக்கு வாடகை ஏற்றுவதிலோ அல்லது பெரிய புதுப்பிக்கும் திட்டங்களை ஆரம்பிப்பதிலோ, செயல் துவக்க வேண்டும்.

சமூகப் பொது உபயோகக் கட்டிடங்களும் அறைகளும்

கூட்டம் கூடவும், கொண்டாட்டத்திற்கும் சமூகப் பொது உபயோக அறை

பல இலாப இலக்கற்ற கூட்டுறவுக் குடியிருப்புகளில், சமூகப் பொது உபயோகக் கட்டிடங்களோ அறைகளோ இடம் பெற்றிருக்கும். அங்கு வசிப்போர் பற்பல விஷயங்களுக்கு அங்கு கூடலாம். தனிக் கொண்டாட்டங்களுக்கும் அவற்றை வாடகைக்கு எடுக்கலாம்.

கூட்டுறவுக் குடியிருப்புAudio

கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமாயும் அவர்களால் நிர்வகிக்கப்படும் பிளாட்கள் அல்லது வீடுகளின் தொகுதிகளே கூட்டுறவு வசிப்பிடங்கள். கூட்டுறவு வசிப்பிடம் பெற, நீங்கள் கூட்டுறவின் பங்குகள் வாங்க வேண்டும். உங்களுக்கு அதனால் முழு உடைமையில் ஒரு கூட்டுச் சொந்தம் கிடைப்பதுடன், ஒரு பிளாட்டுக்கும் உரிமை கிடைக்கிறது. பங்கு தவிர, கூட்டுறவுச் சங்கத்திற்கு வீட்டு வாடகை நீங்கள் தர வேண்டும்.

விதிகளை மற்றும் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பங்கு கொள்ளுங்கள்

பங்கு வாங்கியதால், தானாகவே நீங்கள் கூட்டுறவு குடியிருப்புச் சங்கத்தின் உறுப்பினர் ஆகின்றீர்கள். சங்கத்தின் நடவடிக்கை முறைகள், சங்கமும் வசிப்போரும் பின்பற்ற வேண்டிய விதிகள் போன்றவற்றை, மற்ற உறுப்பினருடன் சேர்ந்து நீங்கள் தீர்மானிக்கலாம்.

வாடகையின் அளவு சங்கத்தின் பங்கு விலை இவை ஆண்டு பொதுக் கூட்டத்தில் தீர்மானமாகும்

கூட்டுறவு குடியிருப்பச் சங்கத்தின் மிக முக்கியத் தீர்மானங்கள் வருடாந்தர பொதுக் கூட்டத்தில் செய்யப்படுகின்றன.

வருடாந்தர பொதுக் கூட்டம் பங்குகள் விலை, கேட்க வேண்டிய வாடகைத் தொகை இவற்றை நிர்ணயிக்கிறது. சில சங்கங்களில் பங்கு விலை குறைவாயம் வாடகை அதிகமாகவும் இருக்கும். மற்ற சங்கங்களில் இதற்கு எதிர் மாறாக இருக்கும். ஆனால் உடைமையாளர் வசிக்கும் குடியிருப்புகளை விட, அநேகக் கூட்டுறவுக் குடியிருப்புகள் விலை குறைவானதாக இருக்கும்.

உடைமையாளர் வசிக்கும் குடியிருப்புகள்Audio

உடைமையாளர் வசிப்பிடம் என்பது வாங்கப்படும் ஃபிளாட் அல்லது வீடாக இருக்கலாம்.

நில/வீட்டு சொத்து வாங்க அனுமதி

உடைமையாளர் வசிக்கும் இருப்பிடம் வாங்க அனுமதி பெற நீங்கள் டென்மார்க் குடிமகனாக இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு இருப்பிட அனுமதி கிடைத்திருந்தால், விதிவிலக்குக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். டென்மார்க் நீதித்துறை அமைச்சகத்திலிருந்து (Justitsministeriet) விண்ணப்பப் படிவங்களை நீங்கள் பெறலாம்.

வீடு விற்பனையாளரும் சட்ட தாரணியும்

விதிகள் மற்றும் உரிமைகள் குறித்த அறிவுரை

பெரும்பாலான உடைமையாளர் இருப்பிடங்கள் வீடு - நிலத்தரகர் (எஸ்டேட் ஏஜெண்டு) மூலம் விற்கப்படுகின்றன. செய்தித்தாள், இணையம், நீங்கள் இருப்பிடம் வாங்க விரும்பும் இடத்து வீடு-நிலத்தரகர் தரும் விளம்பரம் இவற்றைப் பாருங்கள்.

வீடு-நிலத்தரகர் பிரதானமாக விற்பவரின் பிரதிநிதி என்றாலும், அவர் விற்பனை சம்பந்த விதிகள், உரிமைகள் பற்றி வாங்குபவர்க்கு அறிவுரை தரக்கூடும். வீடு-நிலத்தரகர் சேவையின்றி வாங்கவும் நீங்கள் தெரிவு செய்யக்கூடும்.

எப்போதும் ஒரு வழக்கறிஞருடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் தெரிவு என்னவாக இருந்தாலும் ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்வது நல்லது. இது உங்கள் விருப்பம்/நலம் கருதப்படுவதற்கு உறுதியளிக்கும். தவிரவும், வழக்கறிஞர் தவறுகளால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈடு செய்ய வழக்கறிஞருக்கு ஒரு காப்பீடு உள்ளது.

கடன்கள்

சேமிப்பு வங்கியும் அடைமான வங்கியும்

ஒரு வீடு வாங்க, ஒரு சாதாரண வங்கியிலிருந்தோ அல்லது ஒரு அடைமான வங்கியிலிருந்தோ*, நீங்கள் கடன் பெறலாம். கடன் வழங்கும் முன், வங்கி உங்களது திருப்பித் தரும் திறனைக் கவனிக்கும். இது சம்பந்தமாக, உங்களுக்கு வேலை உள்ளதா, நிலையான வருவாய் உள்ளதா என்பவை முக்கியமானவை. உங்கள் வீட்டை அடைமானம் வைத்து, அந்தப் பாதுகாப்பில் ஒரு அடைமான வங்கியிலிருந்தும் நீங்கள் கடன் பெறலாம்.

இருக்குமிடங்கள், வசிக்கும் பகுதிகள் பற்றிய விதிகளும் கட்டுப்பாடுகளும்Audio

கவனிப்பாளர்

பராமரிப்பு வேலை

அநேக வாடகை மற்றும் கூட்டுறவு வசிப்பிடங்களில் கவனிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் பொது இடங்களை பராமரிப்பது போன்ற நடைமுறை வேலைகளுக்கு உடைமையாளர்களால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிளாட்களில் சிறு அளவில் பழுது பார்ப்பதும் அல்லது தொழிலாளியை அழைப்பதும் செய்வர். கட்டிடங்களின் வசிப்பு விதிகள் கவனிப்பாளருக்குத் தெரிந்திருக்கும்.

சந்தேகம் இருந்தால், கவனிப்பாளரிடமோ அக்கம் பக்கத்தாரிடமோ கேளுங்கள்

அநேக வாடகை மற்றும் கூட்டுறவு வசிப்பிடங்களில் வசிப்பு விதிகள் உண்டு. இவை உடைமையாளர்களாலோ அல்லது வசிப்பவர்களாலோ நிர்ணயிக்கப்பட்டவை. மாடிப்படிகளைச் சுத்தம் செய்தல், இடத் துப்புறவு, வளர்ப்புப் பிராணிகள் வைத்திருத்தல், மிதி வண்டிகளை மற்றும் குழந்தையை வைத்துத் தள்ளும் வண்டிகளை எங்கு வைப்பது இவை பற்றி இவ்விதிகள் கூறலாம்.

வசிப்பு விதிகள் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கவனிப்பாளரிடமோ, பக்கத்தில் வசிப்போரிடமோ கேட்டுக் தெளியுங்கள்.

  

இரைச்சலும் பிறர் சௌகரியம் கருதுவதும் அதிகத் தொகையில் மக்கள் அருகருகே வசிக்கையில், ஒருவருக்கொருவர் நலம் கருதுவது மிகவுமே முக்கியம். ஆகவே நீங்கள் வசிப்பு விதிகளை அனுசரித்தும், அக்கம்பக்கத்தோரை மதித்தும், பிறருக்கு தொந்தரவு மற்றும் அமைதிக் கலைப்பு செய்யாமலும் இருக்க வேண்டும். ஃபிளாட்டுகளில் வசிக்கையில் அக்கம்பக்கத்தோர் செய்யும் சத்தங்களை எப்போதும் கேட்க முடிகிறது. எப்போதாவது மேலே இருப்போரது காலடிச் சத்தங்கள், உரத்த குரல்கள், குழந்தை அழுகை, தொலைக் காட்சி மற்றும் ஸ்டீரியோ சாதனங்களின் சத்தங்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால் பாட்டு அல்லது பொதுவான சத்தம் தொடர்ந்து வரும் தாளா இரைச்சல் ஆகிவிட்டால், அதைத் தடுக்கும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இரைச்சலுக்குக் காரணமான அண்டை வீட்டுக்காரரிடம் பேசியும் பலன் இல்லாவிடில், நீங்கள் வாடகையாளர் புகார் குழுமத்துடன் அல்லது நகராட்சி வாடகைக் கட்டுப்பாடு குழுமத்துடன்* தொடர்பு கொள்ளலாம். இரைச்சல் உண்டாக்கும் நபரை அவ்விடத்திலிருந்து பெயர வைப்பது முடிவில் நேரக்கூடும்.

கழிவுப் பொருள் நிர்வாக முறை

கழிவுப் பொருள்களைப் பிரித்து எடுத்தல்

கழிவுப் பொருள்களைக் கையாளுவதற்கு, வெவ்வேறு நகராட்சிகள் வெவ்வேறான விதிகளைக் கொண்டுள்ளன. நிறைய இடங்களில், குப்பைகளை உரிய தனித்தனிக் கூடை அல்லது கொள்கலஙகளில் மக்கள் பிரித்து வைத்தாக வேண்டும். அதாவது சமையலறைக் குப்பைகள், கண்ணாடி, காகிதம் இவை தனித்தனியான கலங்களில் வைக்கப்படுகின்றன.

  

ஆபத்து தரும் கழிவுப் பொருள்களுக்கான விசேட விதிகள்

மனித சுகாதாரத்துக்கோ சூழ்நிலைக்கோ ஆபத்து விளைவிக்கக் கூடிய பழைய. பெயிண்ட், எண்ணெய், மின்கலங்கள், மிகுந்துபோன மருந்துகள் இவற்றை, விசேடமான ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு, எடுத்துச் செல்ல வேண்டும். நாற்காலி, கட்டில் மற்றும் குளிர் பதனப் பெட்டி போன்ற பெரிய சாமான்கள், மறுசுழற்சித் தொழிற்சாலைகளுக்குச்* செல்ல வேண்டும். உங்கள் உடத்துக்கான விதிகள் பற்றி மேலும் விவரம் அறிய, நகராட்சி மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். பதனப் பெட்டி போன்ற பெரிய சாமான்கள், மறுசுழற்சித் தொழிற்சாலைகளுக்குச்* செல்ல வேண்டும். உங்கள் இடத்துக்கான விதிகள் பற்றி மேலும் விவரம் அறிய, நகராட்சி மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஏரியல் திட்டம்

வாடகைக் குடியிருப்புகளில் பொது உபயோக ஏரியல்கள்

அநேக வாடகை இருப்பிடங்கள் பொது உபயோக ஏரியல் திட்டம் மேற்கொண்டுள்ளன. குடிபெயர்ந்து வருகையில் இவ்வசதி உங்களுக்குத் தானாகவே கிடைக்கப் பெறும். ஏரியல் அமைப்பில் கேபிள் டீ.வி. தொலைக்காட்சி முறை அல்லது பொது ஏரியல் டீ.வி. முறை என்றவாறு ஏற்பாடு இருக்கும். வழக்கமாக ஏரியல் கட்டணம் வாடகையில் அடங்கி இருக்கும்.

உங்களது சொந்த ஏரியல் நிறுவ, உடைமையாளர் அனுமதி தேவை.

சில உடைமையாளர் சங்கங்களில் பொது உபயோக ஏரியல் உள்ளது

நீங்கள் ஒரு உடைமையாளர் வசிக்கும் இருப்பிடத்தில் வாழ்ந்து வந்தால், உங்களது சொந்த ஏரியலை நிறுவ முடியும். எனினும், உங்களது வீட்டு உடைமையாளர் சங்கம்* ஒரு பொது உபயோக ஏரியல் திட்டத்தை இயக்கலாம்.

உறுப்பினர்களுக்கு தொலைக்காட்சிச் சேனல்களை ஏரியல் சங்கங்கள் தெரிவு செய்ய இயலும்

பல பொதுஜன உபயோக ஏரியல் திட்டங்கள், பொது உபயோக ஏரியல் சங்கத்தால் நிறுவப்படுபவை. அச்சங்கத்தில் சேர்ந்தால், உங்கள் குடியிருப்புப் பகுதியின் தொலைக் காட்சிச் சேனல்கள் தெரிவு பற்றி, நீங்களும் கருத்துத் தெரிவித்து மாறுதல் கொண்டு வரக்கூடும்.

மின்சாரம், தண்ணீர், சூடேற்றுதல்

மின்/வெப்ப சக்திக்கு வரி அதிகம்

ஒப்பிடுகையில் டென்மார்க்கின் மின்சார, தண்ணீர், சூடேற்றும் வசதிகள் விலை அதிகமானவை. சூழ்நிலைப் பாதுகாப்பு கருதி, சமூகம் சக்திச் செலவழிப்பைக் குறைக்க விழைகிறது. சக்தி மீதான வரிகள் இதனால்தான் மிக அதிகம்.

மின்சாரம், தண்ணீர், சூடேற்றுதல் இவற்றின் செலவழிப்பை நீங்கள் குறைக்கலாம். உதாரணமாக இவ்வழிகளில்:

  • அறையை விட்டுச் செல்லும்போது விளக்கை அணைப்பது
  • சக்தி சிக்கனப்படுத்தும் மின்விளக்குகளைப் பயன்படுத்துவது. விலை அதிகமானாலும் இவை பத்து மடங்கு அதிக காலம் உழைக்கும்
  • முழுத் தொட்டியில் நீர் நிரப்பி அதில் குளிப்பதைத் தவிர்த்து, குழாய்ப் பொழிவில் குளிப்பது
  • ஓடும் குழாய்த் தண்ணீர்ல் பாத்திரம் கழுவுவதற்குப் பதிலாக அகல வாளியில் தண்ணீர் எடுத்து அதில் கழுவுவது.

வீட்டை சீர்திருத்தி அமைப்பது

மின்சார, தண்ணீர், சூடேற்றும் வசதிகள் நிறுவுதல்

உங்கள் வீடு சொந்த வீடானால், உங்களுக்குப் பிடித்த மாதிரி உள் அலங்காரங்களையும், சீர்திருத்தங்களையும் செய்யலாம். ஆனால், பாதுகாப்பு காரணமாக மின்சார, தண்ணீர், சூடேற்றும் வசதிகள் நிறுவுகையில் குறிப்பிட்ட சில விதிகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றில் சில வேலைகளை உரிமம் பெற்ற தொழிலாளர்களே செய்தாக வேண்டும். இந்த விதிகளின்படி நீங்கள் நடக்காவிட்டால், சேதங்கள் பின்னர் ஒருகால் ஏற்பட்டால், காப்பீடு நஷ்ட ஈடு தராது.

வீட்டை விரிவாக்க, நகராட்சி அதிகார அனுமதி தேவை

வீட்டின் வெளிப்புறத்தைத் திருத்தி அமைப்பதற்கு, உதாரணத்திற்கு சன்னல்/ பால்கனி அல்லது வீட்டின் பக்கத்தில் சிறு கட்டிடம்/கார் நிறுத்துமிடம் அமைப்பதற்கு, அளவு மற்றும் அமைப்பு பற்றி சில விதிகள் பின்பற்றப்பட வேண்டியன. எனவே சீர்திருத்த வேலை துவக்குவதற்கு முன்னதாக, தேவையான அங்கீகரிப்புகளையும் அனுமதிகளையும் நீங்கள் நகராட்சி அதிகாரத்திடமிருந்து பெற வேண்டும்.

கூட்டுறவு குடியிருப்பு சங்க உறுப்பினர்கள் குழுமத்திடம் அறிவிக்க வேண்டும்

நீங்கள் ஒரு கூட்டுறவு குடியிருப்புச் சங்க உறுப்பினராக இருந்தால், வீட்டைச் சீர் திருத்தி அமைக்கும் வேலை ஆரம்பிக்கும் முன், அனுசரிக்கப்பட வேண்டிய விதிகளும் கட்டுப்பாடுகளும் சங்கத்தில் உள்ளனவா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாடகைக்கு வசிப்போர் வீட்டில் மாற்றி அமைப்புச் செய்ய உடைமையாளர் அனுமதி பெற வேண்டும்

நீங்கள் வாடகைக்கு வசிப்பவராக இருந்தால், குறிப்பிட்ட சில மாறுதல்களையும் மேம்பாடுகளையும் உங்கள் இருப்பிடத்திற்குச் செய்வது ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தையோ பாத்திரம் கழுவும் இயந்திரத்தையோ, முன் அங்கீகாரம் பெற்று, நீங்கள் நிறுவலாம். எந்தப் பெரிய மாறுதல்களையும் மேற்கொள்ளும் முன், உதாரணத்திற்கு சமையலறையில் புதிய ஏற்பாடுகள் செய்வதற்கோ, குளியலறையை மாற்றி அமைக்கவோ நீங்கள் உடைமையாளரின் அனுமதி பெற்றாக வேண்டும். வேலைக்கான செலவு உங்களுடையது. ஆனால், நீங்கள் இடம் மாறிச் செல்கையில், உடைமையாளரிடமிருந்து செலவின் ஒரு பகுதித் தொகை உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கக் கூடும்.

இத்தகைய வேலை துவக்கும் முன்னர் உடைமையாளருடனோ அல்லது கட்டிட மேலாண்மை அலுவலகத்துடனோ* தொடர்பு கொள்ளுங்கள்.

   

காப்பீடு

திருட்டுப் போன அல்லது தீ அல்லது தண்ணீரால் சேதமடைந்த பொருட்கள் இழப்புக்கு ஈடு கட்டுதல்

பொருள் அடக்கக் காப்பீட்டில் உங்கள் வீட்டின் அனைத்துச் சாமான்கள் மேலும் நாற்காலி கட்டில் போன்றவை. துணிமணிகள், இசைக்கும் சாதனங்கள், தொலைக் காட்சிப் பெட்டி இவை அடங்கும். அதாவது அவை திருட்டுப் போனாலோ தீ தண்ணீர் இவற்றால் சேதமடைந்தாலோ ஈட்டுத் தொகை கிடைக்கும். எந்தத் திருட்டும் உடனடியாக காவலரிடம் அறிவிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் காப்பீடு கழகம் ஈடு தராது.

நீங்கள் வாடகை அறையில் குடியிருந்தால்

நீங்கள் ஒரு வீட்டின் ஓர் அறையில் வசித்தாலும் அல்லது ஒரு பிளாட்டில் வசித்தாலும் நாற்காலி கட்டில் போன்றவைக்கும் மற்றும் பிற உடைமைகளுக்கும் காப்பீடு செய்து கொள்வது முக்கியம்.

மற்றொரு முகவரிக்கு மாறுதல்Audio

உங்கள் முகவரி மாறினால் நகராட்சி அதிகாரத்துக்குத் தெரியப்படுத்துதல் அவசியம்.

எல்லா நகராட்சிகளும் அந்நகராட்சிகளில் வசிப்போரைப் பதிவு செய்கின்றன. நீங்கள் இடம் பெயர்ந்தால், உங்களது புதிய முகவரியை நகராட்சிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதனை, இடம் மாறி ஐந்து நாட்களுக்குள் தெரிவித்தாக வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்திலிருந்து உங்கள் முகவரி மாறுதல் படிவங்களின் உறையைப் பெறுங்கள்

உங்களது இட மாற்றம் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்கான அனைத்துப் படிவங்கள் கொண்ட உறையை நீங்கள் அஞ்சல் அலுவலகத்திலிருந்து பெறலாம்.





கடைசி புதுநிலை: 30-06-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை