9. வேலைகளும் தொழிலாளர் சந்தையும்
டென்மார்க்கில் பணி புரிவது
ஒரு வேலையில் இருப்பது மிகவும் முக்கியம்
வேலை ஒன்று இருந்தால் உங்களுக்கு சுயமரியாதை கிடைப்பதுடன், மற்றவர்களிடமிருந்தும் மரியாதை கிடைக்கும். ஏனெனில் அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆதரித்துக் கொள்ளச் செய்வதுடன் சமுதாயத்திற்கு பங்காற்றவும் உதவுகிறது.
அநேக வயது வந்தோர்களும் வேலையில் இருக்கிறார்கள்
டென்மார்க், வேலை செய்யும் வயதுடைய பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தொழிலாளர் சந்தையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
பெரும்பாலோர் தனியார் அல்லது அரசு தொழில் முயற்சிகளில் ஊதியம் அல்லது சம்பளத்திற்காக பணி புரிகிறார்கள். தவிரவும், பலர் சுய தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சில்லறை வணிகம், உணவு வழங்கும் தொழில் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
டென்மார்க்கில் வேலைவாய்ப்பு விகிதம்
டென்மார்க்கில் வேலைவாய்ப்பு விகிதம் 2001 ஜனவரி 1-ம் தேதியன்று 16 மற்றும் 66-க்கும் இடையேயான வயதுள்ள மக்களின் தொழிலாளர் சந்தை நிலை:
| தொகை எண் | சதவிகிதம் | |
| வேலையில் இருப்போர் | 2,681,438 | 75 % |
| வேலை இல்லாதவர் | 118,520 | 3 % |
| தொழிலாளர் சக்திக்கு அப்பால் | 798,346 | 22 % |
| மொத்தம் | 3,598,304 | 100 % |
ஆதாரம்: Denmark Statistik
சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர் சந்தை
டென்மார்க் தொழிலாளர் சந்தை மிகவும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டது. தொழிலாளர் சந்தையின் தேவைக்குப் பொருத்தமாக பயிற்சித் தகுதிகளும், ஆற்றல்களும் தேவைப்படுகின்றன. சுத்தம் செய்யும் பணியை நாடுபவர், தொழிற்சாலைத் தொழிலாளர், பொறியாளர், வீட்டில் இருக்கும் மூத்தக் குடிமகன், தனது சொந்த வணிக நிறுவனம் அல்லது தொழில் நிறுவனத்தை நடத்துவோர் என அனைவருக்கும் இது சமமாகப் பொருந்தும்.
உங்களிடம் என்ன ஆற்றல் இருக்கிறது?
நேராக ஒரு வேலையை தேடிக்கொள்ள நீங்கள் முயல வேண்டுமா அல்லது ஒரு பயிற்சி மற்றும் கல்வித் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டுமா என்பது முதலில் உங்கள் ஆற்றல் நிலையைப் பொறுத்தது. உங்களுக்கு சிறிதும் கல்வி அல்லது பயிற்சி இல்லையானால் தேர்ச்சி தேவைப்படாத வேலையை கண்டுபிடித்தல் நடைமுறையில் அதிகம் சாத்தியமானதாக இருக்கும். உங்களை வேலைக்கு தகுதிப்படுத்தும் ஒரு சில குறுகிய கால பயிற்சி வகுப்புகளை முடித்துக்கொண்டு இதற்கு முயல்வது சாத்தியமாக இருக்கலாம்.
தொழிலாளர் சந்தையில் கால் ஊன்ற இடம் கிடைத்தல்
உங்கள் முதல் வேலைக்கு எப்போதுமே நல்ல சம்பளம் கிடைக்காமல் போகலாம். அது உங்கள் கல்வி/பயிற்சி அல்லது நலன்களுக்குப் பொருத்தமில்லாமலும் போகலாம். எனினும் அது தொழிலாளர் சந்தையை உங்களுக்கு பரிச்சயமுள்ளதாக்கலாம். இதன் மூலம் மேலும் சிறந்த வேலைகளுக்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
மேலும் தகவலுக்கு, உதாரணமாக கல்வி அல்லது பணி இடத்தில் நடைமுறைப் பயிற்சி மூலம், உங்கள் ஆற்றல்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதற்கு, ''புதிய குடிமக்களுக்குடைய அறிமுகம்'' மற்றும் ''பள்ளியும் கல்வியும்'' என்ற பிரிவுகளைப் பார்க்கவும்.
ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பம் செய்வோர் பலர்
எவ்வொருவருக்கும் ஒரு வேலை கிடைக்கும் என்பது உத்திரவாதமல்ல. நீங்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது, ஒவ்வொரு வேலைக்கும் பலர் விண்ணப்பம் செய்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கு கல்விபயிற்சி எதுவும் இல்லையானால் மற்றும் உங்களுக்கு டேனிஷ் மொழி பழக்கமில்லையானால் வேலை கிடைப்பது என்பது குறிப்பாக சிரமமாக இருக்கும்.
தகுதிபெற்ற தொழிலாளர் தட்டுப்பாடு
டென்மார்க்கில் பிற நாட்டு இனச் சிறுபான்மை மக்களிடையே வேலை இல்லாமை விகிதம் மிகவும் அதிகம். ஆனால் மொத்தமாக வேலையின்மை விகிதம் 1990-களின் நடுவில் சுமார் 10% ஆக இருந்தது. அது, 2001-இல் 5% ஆகக் குறைந்து விட்டது. எனினும் இந்தக் குறைவு, பல தொழில்களில் தகுதியான பணியாளர்களை வேலைக்குத் தேடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனிஷ் பேசக்கூடியவர்களும் மற்றும் கல்வி/பயிற்சி பெற்றவர்களுமான பிற இனச் சிறுபான்மை குடிமக்களை நாடுவது அதிகரித்து வருகிறது.
டென்மார்க் தொழிலாளர் சந்தை
டென்மார்க் தொழிலாளர் சந்தை வகைமுறை
டென்மார்க்கில், தொழில் முனைவோர்கள் ஊழியர்களுடன் தாமாகவே கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்கிறார்கள். உதாரணமாக ஊதியங்கள்/சம்பளங்கள் வேலை நேரங்கள், கல்வி, பயிற்சி, வேலை நீக்க விதிகள் போன்றவற்றிற்கு உடன்பாடு செய்து கொள்கிறார்கள். வேறு சில நாடுகளில் காணப்படும் நிலைமை போல் அல்லாமல் டென்மார்க்கில் இந்தத் துறைகளில் சட்டமியற்றலுக்கான மரபு இல்லை. இதற்குப் பதிலாக ''டென்மார்க் தொழிலாளர் – சந்தை வகைமுறை'' என்று உள்ளது. சமூகக் கூட்டாளிகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்களை சார்ந்திருப்பதை பெரும்பாலும் அது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சம்பள உடன்பாடு கால கட்டத்திற்குள் வேலை நிறுத்தமோ கதவடைப்போ இராது
தொழிலியல் பேச்சு வார்த்தைகளில் டென்மார்க் அரசு தலையிடுவது அரிது. கூட்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொண்டால், உடன்பாட்டு காலத்தில் இரு தரப்பும் வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு செய்வதில்லை என்று ஒப்புக்கொள்கின்றன. ஒப்பந்த காலத்தில் வேலை நிறுத்தமோ கதவடைப்போ நடைபெறாது என்பதே இதன் பொருள்.
சீரான தொழிலாளர் சந்தை
தற்போது டென்மார்க் தொழிற்சந்தையில் ஒரு முழு அலுவல் நேரம் 37 மணி நேரம். ஐந்து வாரங்கள் சம்பளத்துடன் விடுப்பு உண்டு. பெண்கள்/ஆண்கள் இருபாலருக்கும் பேறுகால விடுப்பு பெற உரிமை உண்டு. பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விதிகளும் வரைமுறைகளும் மிகவும் கண்டிப்பானவை. 13 வயதிற்குக் குறைவான குழந்தைகள் வீட்டிற்கு வெளியே ஊதிய அடிப்படையிலான வேலை செய்ய அனுமதி கிடையாது.
தொழிற்சங்கங்கள்
பெரும்பாலானோர் ஒரு தொழிற்சங்கத்தில் சேருகிறார்கள்
ஊதியம் மற்றும் சம்பளம் ஈட்டுவோர், தொழிற்சங்கம் ஒன்றில் சேரும் நீண்ட கால பழக்கம் டென்மார்க்கில் உள்ளது. தொழிற் சங்கங்கள், உறுப்பினர்களின் நலன் நிர்வாகத்தால் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கின்றன. அவர்கள் நியாயமான ஊதியம் மற்றும் வேலைக்குரிய சரியான சூழலில் பணிபுரியும்படி பார்த்துக்கொள்கின்றன.
சீரான நிலை உறுதி செய்யப்படுகிறது
தொழில் முனைவோரும் பெருமளவுக்கு தொழில் முனைவோரின் சங்கங்களை அமைத்துக் கொளிகின்றன. பெரும்பாலும் முனைவர்கள் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைக்கின்றனர். தங்கள் ஊழியர்களின் நலவாழ்வுிக்கும் உறுதி செய்வதும் ஊதிய உயர்வு, வேலை நிறுத்தம், வேலை நேரங்கள் போன்ற பிரச்னைகள் தொடர்பாக அமைதியான நிலைமை நிலவுவதும் தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையானது என்று தொழில் முனைவோர் கருதுகிறார்கள்.
தன்னார்வ தொழிற்சங்க கோட்பாடு
டென்மார்க்கில் சங்கம் சேரும் சுதந்திரம் உண்டு. ஆகையால் எந்த நிர்வாகமும் ஓர் ஊழியர் தொழிற் சங்கத்தில் சேருவதைத் தடுக்க முடியாது. அது போலவே, சக ஊழியர்களும் நீங்கள் தொழிற் சங்கத்தில் சேர்வது கட்டாயம் என கருத இயலாது. பல பணியிடங்களிலும் உங்கள் சக ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்தத் தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கும். அப்படி உறுப்பினர் ஆகாவிட்டால், நியாயமான சம்பளம் மற்றும் சரியான பணிச் சூழல் ஆகியவற்றை உறுதி செய்வது சிரமமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
தொழிற்சங்கம் எதிலும் சேருவது உங்கள் தொழில் அல்லது வேலையைப் பொறுத்ததாக இருக்கும். ஒரு தொழிற்சங்கத்தில் நீங்கள் சேரும்போது நீங்கள் உறுப்பினர் கட்டணம் செலுத்துகிறீர்கள்.
நீங்கள் வேலையின்றி இருக்க நேர்ந்தால் வேலையின்மை காப்பீடு செய்து கொண்ட பிறகு நீங்கள் வேலையை இழந்தால் பின் வருமாறு செய்ய வேண்டும். -
நீங்கள் வசிக்கும் பகுதியின் வேலை வாய்ப்பு சேவையுடன் தொடர்புகொள்ள வேண்டும். வேலை இல்லாதவர் என்று நீங்கள் பதிவு செய்துகொண்டு சலுகை அட்டை ஒன்றை பெற வேண்டும். வேலையில்லாமை காப்பீடு நிதியத்திலிருந்து உங்கள் சலுகையைப் பெறும்போது, அந்த அட்டையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் சந்தைக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, எந்த வேலை அளிக்கப்பட்டாலும் அதை ஒரு நாள் அறிவிப்பில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருளாகும். சலுகைகளை பயன்படுத்தும் அதே சமயத்தில் நீங்கள் வேலை ஒன்றைத் தேடிக்கொள்ள கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும். உங்களால் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள இயலவில்லையெனில் வேலை வாய்ப்பு சேவை ஒரு செய்ல் துவக்கும் திட்டத்தை* வழங்க முன் வர வேண்டும். அது உங்கள் தகுதிகளை மேம்படுத்துவதை, உதாரணமாக பயிற்சி வகுப்பு மூலம் அல்லது ஒரு நிறுவனத்தில் பயிற்சியளிப்பு மூலம், நோக்கமாக கொண்டிருக்கும். வேலையின்மை காப்பீடு
ஒரு வேலை கிடைத்தவுடன், வேலையின்மை காப்பீடு நிதியம்* ஒன்றுக்கு பணம் செலுத்துவது சிறந்த வழியாகும். இதனால் நீங்கள் வேலையை இழந்தால், வேலையில்லாமை சலுகை வடிவில் உதவி மற்றும் நிதி உதவி* பெறும் உரிமை உங்களுக்கு கிடைக்கிறது. தொழிற்சங்கக் கட்டணங்களும் வேலையின்மை காப்பீடு நிதியத்திற்கு வழங்கும் தொகையும் வரித் தள்ளுபடிகளுக்கு உரியவை.
வேலை இல்லாமை சலுகைகளை கோருவதற்கு வேலையின்மை காப்பீடு நிதியத்திற்கு ஓராண்டிற்கு நீங்கள் தொகை செலுத்தியிருக்க வேண்டும்.
பணியிடத்தில் அமையும் வாழ்க்கை
பல மக்களின் வாழ்க்கையில் பணியிடம் முக்கியப் பங்கு வகிக்கிறது
பணியிடம் பல மக்களின் வாழ்வில் விரிவாக வேறுபட்டவை. எனினும் அவை ஒனஅறைப் பொதுவாகக் கொண்டுள்ளன. அவை பலரது வாழ்விலும் பெரியதொரு பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல தொழில் வாழ்க்கை, நட்பான சக ஊழியர்கள், நல்ல பணியிடச் சூழல் ஆகியவை எல்லாம் உயர் வாழ்க்கைக்கு உதவும் காரணிகள்.
சக ஊழியர்களுடன் பேசுவதும் பழகுவதும் முக்கியம்
பெரும் அளவிற்கு நிறுவனங்களின் நிர்வாகமே பணியிடத்தை நேர்த்தியான இடமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சக ஊழியர்களிடையே நல்லுறவு நிலவுதல் மிக முக்கியமானது.
பணியிடத்தில் மது அருந்துதல் மற்றும் கூடுதல்/கொண்டாடுதல் அநேகமாக பணியிடங்கள் பலவும் வேலை நேரத்தில் மது அருந்துவதை அனுமதிப்பதில்லை. ஆனால் பல்வேறு சமூக நிகழ்சிகிகளில், வேலை நேரத்திற்குப் பிறகு, மதுபானம் பல சமயங்களில் வழங்கப்படுகிறது. உதாரணமாக, நிறுவனத்தில் ஆண்டு கிருஸ்துமஸ் விருந்தின்போது, மக்கள் ஒருவருக்கொருவர் கிருஸ்துமஸ் வாழ்த்தும், புத்தாண்டு வாழ்த்தும் கூறிக்கொண்டு, ஒன்றாக கிறிஸ்துமஸ் பகல் விருந்தும் உண்ணும்போது அல்லது சுற்றுலா செல்லும்போது மற்றும் இதர விருந்துகளின் போது மதுபானம் வழங்கப்படுவது வழக்கம். சில நிறுவனங்களில், வெள்ளிக்கிழமை இரவு பீர் அருந்தும் பழக்கம் உள்ளது. வேலையின்போது பிரச்னைகள்
பணியிடத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம். உதாரணமாக உடல்நலக் குறைவு, மோசமான சுகாதாரம், ஒத்துழைப்பில் மற்றும் பேச்சு வார்த்தையில் பிரச்னைகள் இருக்கலாம். எப்போதாவது துன்புறுத்தல், பழித்தல், அச்சுறுத்தல் இவையும் நேரலாம். இத்தகைய நிலைமைகள் சற்றும் ஏற்கத்தக்கதல்ல.
பல பணியிடங்களில் பணியாளர் பிரதிநிதி ஒருவர் இருப்பார்
அநேகமாக பெரும்பாலான இடங்களில் ஊழியர்கள் பணியாளர் பிரதிநிதி* ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் பணியாளர்களின் சார்பில் நிர்வாகத்திடம் பேசுவார். பணியாளர் பிரதிநிதி, பணியிடத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதியாகவும் இருப்பார்.
வேலையில் உங்களுக்கு பிரச்னை ஏதும் இருந்தால் அல்லது நீங்கள் மோசமாகவோ நேர்மையற்ற முறையிலோ நடத்தப்படுவதாக உணர்ந்தால் நீங்கள் உடனே உங்கள் பணியாளர் பிரதிநிதியை தொடர்பு கொள்ள வேண்டும். அவர் நிர்வாகத்திடம் அல்லது தொழிற்சங்கத்திடம் இப்பிரச்னை குறித்து பேசுவார். ஒரு பணியாளர் பிரதிநிதியை வேலையை விட்டு நீக்க முடியாது என்பதால், மற்றவர்களுக்கு உள்ள பிரச்னையை அவர் கையாள முடியும். உங்கள் பணியிடத்திற்கு பணியாளர் பிரதிநிதி ஒருவர் இல்லையெனில் நீங்கள் எந்த பிரச்னையையும் உங்கள் தொழிற்சங்கத்திடமோ, அல்லது சாத்தியமானால் உங்கள் நிர்வாகத்திடமோ எடுத்துச் செல்ல வேண்டும்.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி பணியிடச் சூழலை கண்காணிக்கிறார்
பல பணியிடங்களில், ஊழியர்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதியைத்* தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் பணியிடச் சூழலை கண்காணிக்கிறார். கட்டாயமான பாதுகாப்பு சாதனங்கள் இல்லாவிடில், வேலை செய்வோர் அபாயகரமான இயந்திரங்களை இயக்குவதையோ அல்லது ஆபத்து மிக்க பொருள்களைக் கையாளுவதையோ, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி அனுமதிப்பதில்லை.
தொழிற்சாலை சார்ந்த உடற்காயங்களைத் தெரிவிக்க வேண்டும்
நீங்கள் வேலை செய்யும்போது காயமடைந்தால் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரதிநிதி அல்லது நிர்வாகம், உங்களுக்கு நேர்ந்த விபரத்தை டென்மார்க் பணிச்சூழல் அதிகார* அமைப்பிடமும் தொழிற்சாலை சார்ந்த காயங்களுக்கான தேசிய வாரியத்திடமும்* தொழிற்சாலையில் ஏற்பட்ட காயம் என்று அறிவிக்க வேண்டும். இந்த அமைப்புகள் உங்களுக்கு இழப்பீடு பெற உரிமை உண்டா என்பதை தீர்மானிக்கும்.
பாரபட்சம்
பாலினம், இனம், மதம் அல்லது அரசியல் சார்பு, பாலியல் சார்பு அல்லது தேசிய, சமூக அல்லது இன மூலம் ஆகிய காரணங்களுக்காக தொழிலாளர் சந்தையில் பாரபட்சம் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தால், இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றிற்காக நீங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டால் தொழிற்சங்கத்தின் உதவியை நாடலாம்.
வேலை தேடிப் பெறுவது
டேனிஷ் மொழி ஆற்றல்தரம் தேவைப்படும்
டேனிஷ் மொழியில் போதிய ஆற்றல் இல்லையானால், வேலை கிடைப்பது சிரமம். வேலையின் வகையைப் பொறுத்து டேனிஷ் மொழியிலான ஆற்றல் அளவு வேறுபடும். ஆனால் தேர்ச்சி தேவையில்லாத வேலைகளில் கூட வழிமுறைகளையும், குறிப்பேடுகளையும் நீங்கள் புரிந்து கொள்ள இயல வேண்டும்.
பல துறைகளில் ஆள் பற்றாக்குறை இருந்த போதிலும், டேனிஷ் மொழி பேசும் மக்களே வேலைக்கான தகுதியில் முன் நிற்கிறார்கள்.
வேலை தேடிக்கொண்டே இருங்கள்
பல வெளிநாட்டவர்கள், அவர்கள் நன்கு தகுதி பெற்றிருந்தாலும், வேலைக்கான நேர் காணலுக்கு அழைக்கப்படுவதில் பிரச்னை ஏற்படுகின்றன. எனினும், உங்களை இனம் கண்டு, உங்கள் தகுதித் திறனை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனத்தை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
வேலை தேடிக்கொள்ள பல வழிகள்
வேலை தேடிக்கொள்ள நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய பல செயல்கள் உள்ளன.
- செய்தி ஏடுகளிலும், வணிகம் மற்றும் பத்திரிக்கைகளிலும் விளம்பரங்களைப் படியுங்கள்
- நீங்கள் வேலை செய்ய விரும்பும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அவர்கள் அழையாமலே ஒரு விண்ணப்பத்தை அனுப்புங்கள்.
- ஏற்கனவே வேலையில் இருப்பவரை உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
- நீங்கள் வசிக்கும் பகுதியின் வேலை வாய்ப்பு சேவையிடமிருந்து தகவல் மற்றும் ஆலோசனையைப் பெறுங்கள்.
- உங்கள் தொழிற்சங்கத்திடமிருந்து தகவல் மற்றும் ஆலோசனையைப் பெறுங்கள்.
- தற்காலிக வேலை பெற உதவும் முகமை அமைப்பிற்கு விண்ணப்பியுங்கள்.
- இணைய தளத்தில் வேலை தேடுங்கள். (அனைத்துப் பொதுநூலகங்களிலும் இணைய தளத்தை அணுக வசதி செய்து தரப்பட்டுள்ளது.)
- செய்தி ஏட்டில் அல்லது இணைய தளத்தில் விளம்பரம் கொடுங்கள்
- உங்கள் தகுதியை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பது குறித்து நகராட்சியிடமிருந்து அல்லது வேலை வாய்ப்பு சேவையிடமிருந்து ஆலோசனை கோரி பெறுங்கள்.
வேலை விண்ணப்பம் மற்றும் வேலை நேர்காணல்
எழுத்து மூலமான வேலை விண்ணப்பம்
பல சமயங்களிலும் எழுத்து மூலமான விண்ணப்பத்தை அனுப்புமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். விண்ணப்பத்தை எழுதுவதற்கு வேலை வாய்ப்பு மையம், நகராட்சி அல்லது உங்கள் தொழிற்சங்த்திடமிருந்து உதவி பெறலாம்.
வேலைக்கான நேர்காணல்
வேலை நேர்காணல் ஒன்றுக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அங்கு பல சமயம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், உதாரணமாக பொது மேலாளர் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதி, உங்களை நேர்காணல் செய்வார்கள்.
நேர்காணலின்போது, வேலைக்கு நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா, பணியிடத்திற்கு நீங்கள் பொருத்தமானவராக இருப்பீர்களா என்பதை கண்டறிய அவர்கள் நிச்சயம் முயல்வார்கள்.
வேலைபற்றி, பணியிடம் பற்றி, மற்றும் உங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றியும் நீங்கள் கேட்பதற்கான வாய்ப்பையும் நேர்காணல் உங்களுக்கு அளிக்கிறது.
வேலை ஒப்பந்தம்
ஒருமுறை நீங்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டால், நீங்கள் வேலை ஒப்பந்தம் ஒன்றைப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் பின் வருபவற்றிற்கு வகை செய்யப்பட்டிருக்கும்.
- ஊதியம்/சம்பளம் மற்றும் வேலை நேரங்கள்
- விடுமுறைகள்
- வேலை தொடங்கும் நேரங்கள்
- வேலையை விடுவதற்கான அல்லது நிறுத்துவதற்கான நிபந்தனை
பணியமர்த்துவோர் எதிர்பார்ப்பது இதுதான்: - வேலையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் தெளிவாக, உடனே புரிந்து கொள்ளக்கூடிய டேனிஷ் மொழியில் விஷயங்களைத் தெரிவிக்கும் திறமை வேலைக்கு பொருத்தமான முன் அனுபவம் நன்கு அமைந்த எழுத்து மூலமான வேலை விண்ணப்பம். அதில் சுய குறிப்புப் பட்டியல் (அதாவது ''Curriculum Vitae'' உங்கள் கல்வியின் பின்னணி, வேலை அனுபவம், வயது மற்றும் ஆர்வமுள்ள துறைகள் போன்றவற்றின் சுருக்கமான குறிப்பு) அடங்கியிருக்க வேண்டும். உங்கள் கல்வித் தகுதிக்கான ஆவணச் சான்றுகள். உதாரணமாக பட்டப் படிப்பு சான்றிதழ்களை, கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், பரிந்துரைக் கடிதங்கள் ஆகியன இருக்க வேண்டும். தன்னார்வப் பணி ஏதாவது செய்து கொண்டிருந்தால் அது உட்பட உங்கள் பொழுது போக்கு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் விண்ணப்பத்தில் தெரிவிக்கலாம். தனியாகவும், குழுவாகவும் வேலை செய்யும் திறன் மற்றும் மன உறுதி முயற்சிக்கு முன் வருதல் வளைந்து கொடுக்கின்ற மற்றும் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு. சொந்தத் தொழில் அல்லது வணிகம் தொடங்குதல்
பல சட்டங்களும் வரைமுறைகளும்
தங்கள் சொந்தத் தொழில்/வணிகம் நடத்துவதற்கு அவசியமான உற்சாகமும் முன் முயற்சியும் உள்ள மக்கள் டென்மார்க் சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள். எனினும் புதிய வணிக அமைப்பிற்கு நன்கு சிந்தித்து ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு, நீங்கள் தெரிந்து கொள்ளவும் பின்பற்றவும் வேண்டிய பல சடட விதிகளும் வரைமுறைகளும் இருக்கின்றன.
தங்கள் தொழிலை, வட்டார சுங்க மற்றும் வரி அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிதி நிலை அறிக்கைகள் வழக்கமான அடிப்படையில் சுங்கம் மற்றும் வரி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மதுபானம் வழங்குவதற்கு உரிமம் பெற வேண்டும். சமையல் அறைகள் சுகாதார அதிகாரிகள் நிர்ணயித்த தரங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உங்களிடம் பணியாளர்கள் இருந்தால் அவர்களுக்கு தொழிலியல் காயத்திற்கு எதிரான காப்பீடு மற்றும் சுகாதாரக் காப்பீடு எடுக்க வேண்டும். மோசமான சுகாதார நிலைமைகள், வேலை செய்யும்போது விபத்துகள் நேருதல் ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்களையும், பணியாட்களையும் பாதுகாப்பதற்கும், வரி மோசடியைத் தடுப்பதற்கும் இவைத் தேவைப்படுகின்றன.
தொழில் தொடங்கும் முன் அறிவுரை பெறவும்
சுய தொழிலில் ஈடுபடுவதற்கு முன் ஆலோசனை பெறுவதற்கான பல வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்கள் நகராட்சியில் உள்ள தொழில் வழிகாட்டி அலுவலகத்தை, உங்கள் மாநில மாவட்ட அலுவலகத்தின் தொழில் முனைவு நிறுவன ஆலோசகரையும், சுங்க மற்றும் வரி அதிகாரிகளையும் (Told og Skat) வேலை வாய்ப்பு மையத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இணைய தளத்தில், கிடைக்கக்கூடிய ஆலோசனை உதவிகளின் பொதுவான விவரமும், சட்ட விதிகள் மற்றும் வரன்முறைகள், நிதி வாய்ப்புகள் முதலானவை பற்றிய தகவலும் கிடைக்கும்.
வேலை இல்லாதோர்க்கு செயல் துவக்கும் திட்டங்கள்
வேலை தேடிக்கொள்ள இயலாதவர்களுக்கான செயல் துவக்கும் திட்டங்கள்
டென்மார்க்கில் விரிவான '' சமூகப் பாதுகாப்பு ஏற்பாடு '' இருக்கிறது. தங்கள் வாழ்க்கைக்கு வழியில்லாதவர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டு தொழிலாளர் சந்தையில் அடியெடுத்து வைக்க உதவுவது அதன் நோக்கமாகும். தொழிலாளர் சந்தையில் நீங்கள் இடம் பெறுவதற்கு உங்களை தகுதியாக்கிக் கொண்டு வருகையில் அறிமுக உதவி* , ரொக்கப் பயன்* அல்லது வேலையின்மை சலுகை* பெற உங்களுக்கு உரிமை உண்டு.
சமூக முறையானது, திறன் உள்ளவர்கள் சுயமாகத் திகழ வேண்டும் மற்றும் உரிமைகளும் கடமைகளும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இதனால் வேலை ஒன்றை நாடி, அதை ஏற்று செய்வதற்கு உங்களுக்கு கடமை உண்டு. எனினும் உடனே முறையான வேலையை தேடிக் கொள்ள முடியவில்லையானால், நிதி உதவி பெறுவதற்கான நிலைமையாக அது இருந்தால், நீங்கள் செயல் துவக்கும் திட்டம்* எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறினால், நீங்கள் பெற உரிமையுள்ள நிதி உதவி அனைத்துமோ, அல்லது ஒரு பகுதியோ விலக்கிக் கொள்வது போன்ற தடை நடவடிக்கைக்கு வழி செய்யும்.
நகராட்சி செயல் துவக்கும் திட்டங்கள்
கல்வி அல்லது பயிற்சி மூலம் தகுதிகள் பெறுதல்
புதிதாக வந்து சேர்ந்த குடிமக்களுக்கான அறிமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகராட்சி அதிகாரிகள், வேலை நோக்குடைய செய்பாட்டுத் திட்டங்களை* வழங்க முன்வர வேண்டும். மேலும் தகவலுக்கு பக்கம் 31-இல் உள்ள ''நகராட்சி வழங்கும் உதவி மற்றும் அறிவுரை'' என்ற பிரிவை பார்க்கவும்.
டென்மார்க்கில் மூன்று ஆண்டுகள் இருந்தும் நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால் நகராட்சி அதிகார அமைப்பிலிருந்து உதவியும் அறிவுரையும் கூடப் பெறலாம். பின்னர் உங்களுக்கு வேலை இல்லாமல் போகும் போது, வேலையின்மை காப்பீடு இல்லாமல் இருந்தால் இதே முறை பொருந்தும்.
நகராட்சி அதிகார அமைப்பு உங்களுக்கு செயல் துவக்கும் திட்டம் ஒன்றை வழங்க முன்வர வேண்டும். செயல்பாட்டு திட்டத்தின்கீழ் இருக்கும் நபர்கள் கல்வி ஒன்றை தொடங்க தேவையான தகுதிகளைப் பெற வேண்டும். அல்லது ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். உதாரணமாக தொழிற்கல்வி பயிற்சிகள் மற்றும் ஒரு நிறுவனம் வழங்க முன்வரும் வேலை கண்டறியும் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு செய்யலாம்.
சுறுசுறுப்பான முயற்சி தேவை
செயல்பாட்டுத் திட்டக் காலத்தில், நிதி உதவி பெறுவதற்கு நீங்கள் தீவிரமான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். அதாவது, நோய் போன்ற தக்க காரணமில்லாமல் பயிற்சி வகுப்பிற்கோ வேலை கண்டறியும் நடவடிக்கைகளுக்கோ போகாமல் இருக்கக் கூடாது.
செயல் தவக்கும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்க முன் வரும் வேலை எதுவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் உங்கள் அறிமுகச் சலுகைகள் அல்லது பணம் அனைத்தையுமோ அல்லது ஒரு பகுதியையோ இழக்கும் அபாயம் ஏற்படும்.
காப்பீடு செய்யப்பட்ட வேலையில்லாதவர்களுக்கான செயல் துவக்கும் திட்டம்
வேலையின்மை காப்பீடு நிதியத்திற்கு* (பக்கம் 87-இல் ''வேலையின்மை காப்பீடு'' பிரிவை பார்க்கவும்) பணம் செலுத்தி வந்து, மறுபடியும் வேலையில்லாதவராகி விட்டால், உங்களுக்கு செயல்பாடு மற்றும் நிதி உதவியை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பெற உரிமை உண்டு.
செயல் துவக்கும் திட்டத்தின் நோக்கம் இயன்றளவு விரைவில் புதிய வேலை ஒன்றை நீங்கள் பெறுவதற்கு வசதியாக உங்கள் தகுதிகளை மேம்படுத்துவதேயாகும். காப்பீடு செய்தவர்களுக்கான செயல் துவக்கும் திட்டங்களுக்கும், காப்பீடு செய்யாதவர்களுக்கான திட்டங்களுக்கும் இடையே உள்ள தலையாய வித்தியாசம், காப்பீட்டிற்கு உட்பட்டவர்களுடைய பொறுப்பு வேலை வாய்ப்பு மையத்தைச் சார்ந்ததே தவிர நகராட்சி அதிகார அமைப்பைச் சார்ந்தது என்பதல்ல.